கூலியில் விக்ரம் LCU இருக்குமா? அந்த இடத்தை கவனிச்சீங்களா? ரகசியத்தை உடைத்த எழுத்தாளர் சந்துரு!
சென்னை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப் படம், LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்)-வில் இருக்குமா, அல்லது தனிப்படமா என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த மர்மத்திற்கு, 'கூலி' படத்தின் திரைக்கதை எழுத்தாளர் சந்துரு, ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.

கூலி Vs விக்ரம் - LCU மர்மம்
'கூலி' படத்தின் ட்ரெய்லரில், சத்யராஜ், "30 வருஷமா ஒருத்தனை ஆஃப் லைன்ல வெச்சிருக்கேன்," என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அதேபோல, 'விக்ரம்' படத்திலும், "30 வருஷமா ஒருத்தர் கோஸ்ட்டா வாழ்ந்திருக்கார்," என்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.
கன்டைனர் ரகசியம்: 'விக்ரம்' படத்தில், ஃபஹத் ஃபாசில், "காணாமல் போன அந்த இரண்டு கன்டைனர்கள் எங்கே?" என்று ஒரு கேள்வி கேட்டிருப்பார். 'கூலி'யின் ட்ரெய்லரில், அமீர் கான் அருகில், இரண்டு கன்டைனர்கள் இருக்கும். இந்த ஒற்றுமைகளைக் கண்டு, ரசிகர்கள், 'கூலி' திரைப்படம், LCU-வில் இருக்கும் என்று யூகித்து வந்தனர்.
சந்துருவின் பதில்
இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த எழுத்தாளர் சந்துரு, "கண்டிப்பாக, 'கூலி' படத்தில் சர்ப்ரைஸ் இருக்கிறது. ஆனால், இந்தப் படம் LCU-வா அல்லது தனிப்படமா என்பதை, நீங்கள் திரையில் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று கூறினார். லோகேஷ் கனகராஜ், 'கூலி' திரைப்படம், LCUவில் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்த நிலையில், சந்துருவின் இந்த பதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ட்ரெய்லரில் வரும் விஷயங்களைப் பார்த்தும், சந்துருவின் பேச்சைக் கேட்டும், ஒருவேளை இந்தப் படம், LCU தொடர்புடைய படமாக இருக்குமோ என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்
எது எப்படியோ, 'கூலி' திரைப்படத்தில், ரசிகர்களுக்கு, ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. ட்ரெய்லரைப் பார்க்கும்போது, அது தெரிகிறது. குறிப்பாக, படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் தான், அந்தச் சர்ப்ரைஸ் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'கூலி' படத்தில், நிறைய ஹைலைட்டான விஷயங்கள் இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிதான், மிக முக்கியமான ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல, படத்தின் இடைவேளைக் காட்சியும், சிறப்பாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
வசூல் வேட்டை
'கூலி' திரைப்படம், எவ்வளவு வசூல் செய்யும் என்பதுதான், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ₹1,000 கோடியா, ₹1,500 கோடியா என்று, ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணி, ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் விஷயங்களை வைத்திருக்கிறது என்ற நம்பிக்கையில், ஒட்டுமொத்த ரசிகர்களும், திரையுலகமும், 'கூலி' திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு சோசியல் மீடியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது படத்தைப் பற்றிய சின்ன சின்ன விஷயங்களையும் பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை இசை வெளியீட்டு விழா செய்யலாம் நாட்களுக்கு முன்பே நடந்துவிட்ட நிலையில் அதை கட்சியின் கூட எப்போதும் சிலர் விமர்சித்து பேசி வருகிறார்கள். இது கூட இந்த திரைப்படத்தின் ஹைப் ஏற்றி கொண்டு இருக்கிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications