பாட்ஷாவின் "இந்த" ஆல் டைம் ஃபேவரைட் பாடலை வேண்டாம்னு சொன்ன ரஜினி! அப்செட்டான தேவா! சபாஷ் சுரேஷ்
சென்னை: "பாட்ஷா" படத்தில் "நீ நடந்தால் நடை அழகு" எனும் பாடலை, ரஜினிகாந்த் படத்தில் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். பிறகு அந்த பாடல் எப்படி படத்தில் இடம் பெற்றது என்பதை பார்க்கலாம். ரஜினியின் இந்த பிளாக்பஸ்டர் படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் இசையமைப்பாளர் தேவாவும் கலந்து கொண்டனர். அப்போதுதான் அவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

அதாவது, நீ நடந்தால் நடை அழகு பாடலை முதன்முதலில் கேட்ட போது ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ரஜினி, "இந்த பாடல் கேசட்டில் மட்டும் இருக்கட்டும், படத்தில் வேண்டாம்" என கூறியிருந்தாராம்.
இதை கேட்ட தேவா மனவேதனை அடைந்தாராம். இதனால் சுரேஷ் கிருஷ்ணா சங்கடம் அடைந்து இந்த பாடலை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வர வேண்டும் என யோசனை செய்துள்ளார். ஏனென்றால் பாடல் நன்றாக இருப்பதால் அதை விட அவருக்கு மனம் வரவில்லை.
சுரேஷ் கிருஷ்ணா
அப்போதுதான் சுரேஷுக்கு ஒரு யோசனை வந்ததாம். உடனே ரஜினியிடம் போய், இந்த பாடலை நடனக் காட்சியாகவோ அல்லது மற்ற பாடல்களை போல் எடுக்காமல் வித்தியாசமாக எடுக்கலாம் என யோசனை வந்ததாம். இதை சொன்னது ரஜினி உள்பட அனைவரும் ஏற்றனராம்.
கெட் அப்
அதாவது ரஜினிக்கு பல்வேறு கெட் அப் போடுவது, நக்மாவுக்கு யாரை பார்த்தாலும் ரஜினி போல் தோன்றுவது என இயக்குநர் சொன்னதை அடுத்து, அப்படியென்றால், அந்த கெட் அப்களில் ஒன்றாக எனக்கு கண்டக்டர் வேடம் கொடுத்து விடுங்கள் என்றாராம்.
டபுள ஓகே
அதற்கு டபுள் ஓகே சொன்ன சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, ரவுடி வேடம், கண்டக்டர், போலீஸ்காரர், பட்டாச்சாரி வேடம் என பல வேடங்களை ரஜினிக்கு போட்டு இந்த பாடலை எடுத்தனர். இப்படித்தான் இந்த பாடல் அந்த படத்தில் சேர்க்கப்பட்டதாம்.
அதிமுக அமைச்சர்
1995 ஆம் ஆண்டு வெளியான படம்தான் பாட்ஷா. இந்த படத்தை அப்போதைய அதிமுக அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரித்திருந்தார். இதில் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா, ஜனகரராஜ், தேவன், சசிகுமார், விஜயகுமார், ஆனந்தராஜ், கிட்டி, சத்தியபிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதை ஆட்டோ ஓட்டுநரை சுற்றி எடுக்கப்பட்டது.
மும்பை தாதா
மும்பையில் தாதாவாக அதிலும் ஏழைகளை வதைக்கும் ஒரு தாதாவிடம் இருந்து மக்களை காக்கும் தாதாவாக மாறிய ஒருவர், தனது குடும்பத்தினருடன் அந்த இருண்ட வாழ்க்கையை மறைத்துவிட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து ஆட்டோ டிரைவராக வாழ்வது, அங்கு அவர் சந்திக்கும் மற்ற பிரச்சனைகள் குறித்தும் இந்த படம் பேசுகிறது.
ரஜினிகாந்த் ஷாரூக் கான்
இந்த படத்தில் ரஜினிகாந்த், சரண்ராஜ், ரகுவரன், விஜயகுமார் என யாருக்கு என்னென்ன கேரக்டர் கொடுக்கப்பட்டதோ அதை கனகச்சிதமாக செய்துள்ளனர். "பாட்ஷா" படத்தில் ஒரு சண்டை காட்சி, தற்போது ஷாரூக்கான் இருக்கும் வீட்டு வாசலில் எடுக்கப்பட்டது என்ற சுவாரஸ்யமான தகவலையும் சுரேஷ் கிருஷ்ணா வேறொரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ் பேக் என்பதை போல் இந்த படம் அமைந்துள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications