Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ரியா படத்தில் வந்த கார் சேஸிங் சீன்! கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி, ஸ்ரீதேவி! இப்படி ஒரு ஏமாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ப்ரியா படத்தில் கார் சேஸிங் காட்சியில் மக்களை இப்படியா நம்ப வைத்து ஏமாற்றினார்கள்? மக்களால் பாராட்டப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியில் இப்படி ஒரு சம்பவமா? என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஜினிக்கு முதலில் பெரிய ஹிட்டா அமைஞ்ச படம் 'ப்ரியா'... ப்ரியா க்ளைமாக்ஸ்ல ஸ்ரீதேவியை அடைச்சி வச்சிடுவாங்க.. ஸ்ரீராமனின் பாட்டு பாடி அந்த இடத்துக்கு ரஜினி போவார்.

television rajinikanth priya

வில்லன் ஸ்ரீதேவியை ஒரு காருக்குள்ள வச்சி கடத்திட்டு போவான்.. ரஜினியும், அம்பரீஷும் பின்னாடி துரத்துவாங்க. அட்டகாசமான கார் சேஸ்... டைரக்டர் கார் சேஸ் எடுக்க தீர்மானிச்சதும் அவர் செய்த முதல் வேலை Ford கம்பெனி கூட டீல் போட்டது தான். ஃபோர்டும் ப்ரமோஷனுக்காக தங்களோட இரண்டு 325hp Ford mustang GT fastbacks என்ஜினுள்ள Dodge charger வண்டிகளை ஷுட்டிங்குக்காக தந்தாங்க..ப்ரேக், சஸ்பென்ஷன் இதையெல்லாம் ஹெவியா மாற்றிக் கொடுத்துட்டாங்க...மாற்றிக் கொடுக்க பிரபல கார் ரேஸ் வீரர் மாக்ஸ் பல்ச்சோஸ்கி வந்தார்.

சிட்டியோட சில முக்கிய வீதிகளில் தொடங்கி சிட்டி முடிவுல தீரும் படி முதலில் மேப் தயார் பண்ணிக்கிட்டாங்க. 80லிருந்து 90 கிமீ ஸ்பீட் வரணும்னு டைரக்டர் சொன்னாலும் ஷூட்டிங் போது 110 கிமீ ஸ்பீட் வரை ஸ்டண்ட்மேன் ட்ரைவர்கள் காரை ஓட்டினாங்க. சிட்டி முழுக்க பல இடங்களில் கேமரா வைத்து பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டது.

ஒரு காட்சியில் ஒரு கேமிராவையே மோதுவது காட்சியில் காண முடியும்...காரை ஓட்டியது பில்ஹிக்மின் அப்படிங்கிற கார் சண்டைக்காட்சி வீரர். அடுத்த வண்டி Paul அப்படிங்கிற ஸ்டண்ட்மேன். மிகச் சிறப்பா அந்த காட்சி அமைந்தது... மூன்று வாரம் இக்காட்சி படமாக்கப்பட்டது.

தியேட்டரில் இந்த காட்சிக்கு ரசிகர்களின் கை தட்டல் ப்ரியா டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய மன நிறைவை தந்திருக்கும்.... ப்ரியா மறக்க முடியாத க்ளைமாக்ஸ்...
என்னங்க...நான் சொல்வதை நம்ப முடியலையா?..இதெல்லாம் உண்மை...சான்ப்ரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்ட கார் சேஸ் காட்சி சினிமா வரலாற்றில் சிறந்த கார் சேஸ் காட்சிகளில் ஒன்றாக அமைந்து பாராட்டை பெற்றது.

இந்த கார் சேஸ் காட்சியை எடிட் செய்த எடிட்டருக்கு நல்ல பாராட்டும் கிடைத்தது. ஆனா இதெல்லாம் நடந்தது 68ல் வந்த Bullitt அப்படிங்கிற படத்துக்காக.....
அப்போ ப்ரியா?..ப்ரியாவுலயும் இந்தக் காட்சி இருக்கு...அதாவது Bullitt பட ஸ்டண்ட் காட்சி ரீலை வாங்கி ஒட்டிட்டு இடையிடையே ரஜினி, ஸ்ரீதேவி க்ளோசப் காட்டிட்டா சுடச்சுட இன்ஸ்டண்ட் கார் சேஸ் ரெடி... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+