ஒரு ஹார்பரில் 14 ஆயிரம் கூலிகளா? கூலியில் ரஜினியை தூக்கி சாப்பிட்ட சவுபின்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் ஏன் இத்தனை ஓட்டைகள் இருக்கின்றன. இந்த ஓட்டைகளை நீக்கிவிட்டு ரஜினி ரசிகராக படம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'கௌரவர்' என்றொரு மலையாளப் படம் 90களில் வந்தது. போலீஸால் ஆக்கிரமித்து சிறையிலடைக்கப்படும் மம்முட்டி, அதற்கு காரணமான விஷ்ணுவர்த்தனை பல வருடங்களுக்குப்பிறகு கொல்ல வருவார்.

விஷ்ணு சாகும் போது என் மூன்று பெண்களில் ஒரு மகள் உன்னுடையது என்று சொல்லி இறந்து விடுவார். மம்முட்டியை போல எதிரிகளிடமிருந்து மூன்று பெண்களையும் ரஜினி காப்பாற்றுவதும் மற்றும் யார் அந்த பெண் குழந்தை என தேடுவதெல்லாம் கௌரவரை (தமிழ் டப்பிங் 'க்ஷத்திரிய வம்சம்') ஞாபகப்படுத்தியது.
மூன்று பேரில் எந்தப்பெண் மம்முட்டி மகள் என்பது மம்முட்டிக்கு தெரியாமலேயே படம் முடிந்து விடும். இதில் ஸ்ருதிக்கு ரஜினி யார் என்பது தெரியாமலேயே படம் முடிகிறது.
படத்தில் களைப்பூட்டுவது வரும் ஏகப்பட்ட கேரக்டர்கள். அய்யப்பா, கராத்தே கார்த்தி, அமீர்கான், உபேந்திரா காட்சிகளை கத்திரி போட்டாலும் படம் விறுவிறுப்பாகவே இருக்கும்.
கேரக்டர் அறிமுகக்காட்சியெல்லாம் 90களிலேயே மலையேறி விட்டது லோகி. படம் தொடங்கி அதுவே அரைமணி நேரம் ஓடும் போல.
நாகார்ஜுனா, சௌபின் இருவரில் யாரை பெரியாளாக்குவது என லோகேஷுக்கு குழப்பமாகவே இருக்கிறது. படத்தின் ஹீரோ ரஜினியை விட சௌபினுக்கு காட்சிகள் நிறைய இருக்கிறது.
சௌபின் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். 14000 பேர் எனது கூலிகள் என்கிறார் சௌபின். ஆமாம்... 14000 கூலிகள் ஒரு ஹார்பரில் என்னத்தை தூக்குவாங்க?. லோகேஷுக்கே வெளிச்சம்.
நாகார்ஜுனாவுக்கு ஒரு ஆங்கிலப் பாடல் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார் லோகேஷ்.
எந்தக் காலத்திலும் பொறாமைப்பட வைக்கும் பர்சனாலிட்டி நாகார்ஜுனா. இதில் மிக மிக அசத்தலாக வருகிறார். அவரது இரு மகன்களும் இவரது இடத்துக்கு வரமுடியாது. பாட்ஷா முதல் இரண்டு விஷயங்களை ரஜினியை வைத்து இயக்கும் இயக்குனர்கள் எழுதுகிறார்கள்.
1.மாணிக்கம். Flashbackல் அதிரடி பாஷா.
2. என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பெயர் இருக்கு.
கபாலி, பேட்ட, ஜெயிலர் என எல்லாப் படத்தோடு கூலியிலும் இருக்கிறது. கூலியில் இன்னொரு விசேஷம் ஹீரோ ரஜினி அல்லாது நிறைய பேர் அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி 'இன்னொரு பேரு இருக்கு' என்கிறார்கள். ஆட்கள் மட்டுமல்ல. வில்லன்கள் செய்யும் வேலை கூட 'எனக்கு இன்னொரு தொழில் இருக்கு' என்கிறது.
ஒரு ஆங்கிலப் படத்தில் ஓநாயாக மாறி ரத்தத்தை உறியும் ஆட்களின் பிணங்களை அடக்கம் செய்வார் ஒரு பாதிரியார். இரவானால் ஓநாயாகி விடுவார். க்ளேமேக்ஸில் அவர் தான் என ரீவீலாகும். ஊரெல்லாம் வில்லனை தேடும் வில்லன் அவனாகவே இருப்பான். சமீபத்தில் 'லெவன்' படம் கூட இதே தீம் தான்.
தயாள்... என்னய்யா இது?. ரச்சிதா ராம்... ட்விஸ்ட்டின் மன்னி... படத்தில் அயர்ச்சியூட்டும் இன்னொரு விஷயம் இருட்டில் நடப்பது போலவே எடுத்திருப்பது. பகல் காட்சிகள் நாலோ, ஐந்தோ வரும் போல. சத்யராஜ் தயாராக்கும் சாதனத்துக்கு Mobile cremator என்கிறார்கள். அதற்கு அர்த்தம் அதை எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதாகும்.
ஆனால் அதை ஒரு லேப்பில் வைத்து அதை Restricted area என்கிறார்கள். Lab வருவதால் சத்யராஜுக்கு Breaking bad ஹைஸன்பெர்க் கெட்டப்பை கொடுத்திருக்கிறார்கள் போல.
ரஜினி கும்பலில் லொள்ளுசபா மாறன் நிறைய பாஸிட்டிவ் காட்சிகளில் வருகிறார். ஆனால் அதிக க்ளோஸப்கள் அவருக்கு இல்லை.
உபேந்திரா... ஜெயிலரில் ரஜினி இல்லாத இடத்துக்கு சிவராஜ் குமார் வருவார். அதனாலேயே சிவராஜுக்கு பெரும் கை தட்டல். ஸ்ருதி ரயிலில் தவிக்கும் போது போனில் 'சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு நம்ம ஆட்களை அனுப்பு' எனக் கட்டளை இடுகிறார். அங்கு உபேந்திரா வருவார் என எதிர்பார்த்தேன்.

ரஜினியோடு சேர்ந்து வருவதால் அவர் ரோல் பேசப்படாமலேயே போய் விட்டது. ஸ்ருதி... மிக மிக வயதாகி விட்டது. அவரது கேரக்டரை படுகோழையாக காட்டியது ஏனோ?. ரஜினியை பார்த்ததும் இங்கே ஏன் வந்தீங்க?. எனக் கேட்கிறார் ஸ்ருதி. அப்போ சத்யராஜ் ஏன் 'பேட்ஜ் நம்பர் சொல்லி போன் செய். உயிர் போகும் நேரத்தில் உதவி வரும்' .' எனச் சொல்ல வேண்டும். "தேவாவுக்கு போன் போடு. காப்பாற்றுவான்'னு சொல்லிவிடலாமே. ஆனாலும் ஸ்ருதியின் நடிப்பு அந்தக் கேரக்டரை தூக்கி நிறுத்துகிறது.
மகள் சென்ட்டிமெண்ட்டில் ஸ்ருதி பேசப்படுவார்.
ரஜினிக்கு நல்லப் படம். ரஜினி தன் காட்சிகள் வரை இந்த 75 வயதில் புகுந்து விளையாடி இருக்கிறார். எடிட்டிங்கில் இன்னும் கவனித்திருந்தால் அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லராக அசத்தி இருக்கும்.
AI ரஜினி வாய்ஸ் அசத்தல். Young ரஜினி கூட ஓகே.
இரண்டாவது ஹீரோ அனிருத். வைப்லயே வச்சிருக்கார் மனுஷன். 250 வகை அசைவ உணவு விருந்து வைத்த மாமியார் போல லோகேஷ் கொடுக்க நமக்குத்தான் புதுமாப்பிள்ளை போல் 'இதை சாப்பிட்டோமா?. அது என்ன? இதை ஏன் இங்கு வைத்திருக்கிறார்கள்?' எனக்குழம்பி 'எல்லாம் சாப்பிட்டோமா? அந்த நாலாவது வரிசையில் ஐந்தாவது என்ன சிக்கனா?, காடையா?' எனக் குழம்புவது போல குழம்பி...குழம்பி ...
வெளியே வருகிறோம்.
முன்பு ஒரு பதிவில் சொன்னது மாதிரி சென்ட்டிமெண்ட்டோடு முடித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications