இது எப்படி இருக்கு? ரஜினி போட்டுடைத்த ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜிபியின் தர்பார் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை சன் டிவி ஒளிபரப்பியது.

இந்த விழா ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் ஸ்டைல் விருந்தாகவே அமைந்து இருந்தது. விழாவில் பேசிய ரஜினி இரண்டு விஷயங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்.

16 வயதினிலே படம் வெளிவந்த போது, தன்னை ஒரு தயாரிப்பாளர் அவமானப் படுத்தியதை நாசூக்காக கூறியதும், பதிலுக்கு இவர் எப்படி உயர்ந்து காட்டினார் என்பதும் ரஜினிக்கே உரிய இது எப்படி இருக்கு காட்சிகள்தான்!

படம் வெளிவந்து

படம் வெளிவந்து

16 வயதினிலே படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து ஒரு புரடியூசர் வந்து என்னை படத்துக்கு புக் செய்தார். நான் அட்வான்ஸ் குடுங்க சார்னு கேட்டேன். அவர் பேரை சொல்ல விரும்பலை. அட்வான்ஸதானே.. நீங்க மேக்கப் போடறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க கையில ஆயிரம் ரூபாய் குடுத்துடுவாங்கன்னு சொன்னார்.

போனாங்க மேக்கப்

போனாங்க மேக்கப்

வந்தாங்க... ஏவிஎம் ஸ்டுடியோ அழைச்சுட்டு போனாங்க. பேசாம மேக்கப் போட உட்கார சொன்னாங்க. நான் அட்வான்ஸ் கேட்டேன். இல்லையே புரடியூசர் ஒண்ணும் சொல்லலியேன்னு சொன்னாங்க..இல்லை என்கிட்டே தரேன்னு சொல்லி சொன்னாங்கன்னு சொன்னேன். அப்படியா சரி போன் பண்ணி கேட்டுக்கங்கன்னு சொன்னாங்க. நானும் போன் பண்ணி கேட்டேன்..

ஸ்டுடியோ வந்துடறேன்..

ஸ்டுடியோ வந்துடறேன்..

புரடியூசருக்கு போன் செய்தேன்..தோ.. இப்போ ஸ்டுடியோவுக்கு வந்துடறேன்னு சொன்னாங்க, சரி நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கார் வந்துச்சு. அந்த காரின் அவங்க வந்தாங்க. ஜன்னலை இறக்கிவிட்டு.. நீ என்ன பெரிய இவனா..ஒரு படம் ரெண்டு படம் நடிச்சதுக்குள்ள திமிரா..பணம் குடுத்த்தாத்தான் மேக்கப் போடுவியா? போடா.. உனக்கு படமும் இல்லை.. ஒண்ணும் இல்லைன்னு சொன்னாங்க.

கார் அனுப்புங்க

கார் அனுப்புங்க

சரி கார் அனுப்புங்க.. நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். கார் அனுப்பறதா? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்படியோ போன்னு சொல்லிட்டாங்க. என்கிட்டே காசு இல்லை. ஏவிஎம்மில் இருந்து நடந்தே வீட்டுக்கு போறேன். வெளியில் போஸ்டரில் 16 வயதினிலே 2 வது வாரம் ரஜினிகாந்த் இது எப்படி இருக்குன்னு..

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு

நான் நடந்து போயிகிட்டு இருக்கேன்..பஸ்ஸில் போற மக்கள் என்னை பார்த்து கேட்கற மாதிரி இருக்கு. ரஜினிகாந்த் இது எப்படி இருக்குன்னு..அப்போ முடிவு பண்ணினேன். உழைச்சு முன்னுக்கு வந்து சீக்கிரம் ஒரு ஃபாரின் கார் வாங்கணும்னு.அதே மாதிரி ரெண்டரை வருஷத்துல ஃபாரின் கார் வாங்கினேன்.

ஃபாரின் கார்

ஃபாரின் கார்

ஃபாரின் கார்... வாங்கி ஃபாரின் ட்ரைவர்தான் போடணும்னு தேடி புடிச்சு ஃபாரின் டிரைவர் போட்டேன். ரெண்டு 555 சிகரெட் புடிச்சுகிட்டு அதே ஏவிஎம் வாசலில் காரை நிறுத்தினேன். என்று ரஜினிகாந்த் தனது இது எப்படி இருக்கு அனுபவத்தை சுவை பட கூறினாலும், கடைசியில் இரண்டு நாளில் அதை மாற்றிக் கொண்டதை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+