பழசை மறக்கல.. எல்லாமே மனதில் இருக்கு! ஓபனாகவே பேசிய ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்கள், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு. இவ்வளவு இருந்தும் ரஜினிகாந்த் மனசில் இன்றைக்கும் அதிகமாக நினைத்துப் பார்ப்பது சினிமாவை அல்ல, தான் முன்பு செய்த பஸ் கண்டக்டர் வேலையைத்தான்! இதை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருப்பதுதான் இப்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக, படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, நெல்சன் கேட்ட ஒரு கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில் அவருடைய பழைய வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது.

பழசை மறக்கல

நெல்சன் ரஜினியிடம், இத்தனை பெரிய உயரத்துக்கு போய்விட்ட பிறகும் எப்படி இவ்வளவு எளிமையாகவும் பணிவாகவும் இருக்கிறீர்கள்? அது வேண்டுமென்றே கடைப்பிடிப்பதா, இல்லை இயல்பாகவே உங்களிடம் இருக்கிறதா என்பதுதான் அவருடைய கேள்வி.

இதற்குப் பதில் சொன்ன ரஜினிகாந்த், நான் சினிமாவை அதிகமாக நேசிக்கிறேன், ஆனால் அதைவிட பஸ் கண்டக்டராக பார்த்த வேலையை அதிகமாக நேசித்ததேன். 5 வருடமாக பஸ் கண்டக்டராக வேலை பார்த்ததை இப்போதும் நினைத்து பார்ப்பேன். நான் ஒரு கண்டக்டர் என்பதுதான் எப்போதும் மனதில் தோன்றும். அந்த விஷயம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்ற அடையாளங்களை என்னுடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்ற அவரது கருத்துதான் இப்போது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Rajinikanth Jailer Nelson Tamil Cinema

ஒரு காலத்தில் பஸ்ஸில் டிக்கெட் கொடுத்து, பயணிகளிடம் பேசிக்கொண்டிருந்தவர் இன்று இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால், அந்தப் பழைய வாழ்க்கையைத் தனது மனதிலிருந்து அவர் நீக்கிவிடவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

பெங்களூரு நாட்கள்

ரஜினிகாந்த் தனது பழைய கண்டக்டர் வாழ்க்கையை பற்றி பேசும்போது இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் பகிர்ந்திருக்கிறார். அடிக்கடி பெங்களூரு செல்லும்போது, தான் முன்பு பார்த்த பேருந்தையும் காக்கி உடையையும் பார்க்கும்போது மனதுக்குள் ஓர் ஈர்ப்பு ஏற்படுமாம். இப்போது அவரைச் சுற்றி இருக்கும் வாழ்க்கைக்கும் அப்போது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். ஆனாலும், அந்தப் பழைய வேலையைப் பற்றிப் பேசும்போது அவருக்குள் இருக்கும் நினைவுகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

இதில் ரஜினி சொன்ன இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு பஸ் கண்டக்டர் பயணிகளிடம் எப்படி மரியாதையாகவும் பணிவாகவும் நடந்துகொள்வாரோ, அப்படித்தான் தானும் மற்றவர்களிடம் நடந்துகொள்வதாக அவர் விளக்கியிருக்கிறார். அதாவது, தன்னைச் சுற்றியிருக்கும் புகழையும் பட்டத்தையும் விட, தான் யார் என்பதை மறக்காமல் இருப்பதுதான் அவருடைய அணுகுமுறை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

76 வயதிலும் ஹீரோ

ரஜினிகாந்துக்கு இப்போது 76 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் கதாநாயகனாகத் தொடர்ந்து நடிப்பது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்படுகிறது. அதற்கும் அவர் கொடுத்த பதில் எளிமையானதுதான். தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள்தான் இதற்குக் காரணம் என்று அவர் பேசினார். பல ஆண்டுகளாகத் திரையரங்குகளுக்கு வந்து தனது படங்களைக் கொண்டாடும் ரசிகர்களின் அன்புதான் தொடர்ந்து நடிக்கத் தனக்குக் கிடைக்கும் ஊக்கம் என்று கூறியிருக்கிறார்.

ரஜினியின் இந்தப் பேச்சில் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று, தன்னுடைய பழைய வாழ்க்கையை அவர் இன்னும் மறக்கவில்லை. இன்னொன்று, இத்தனை ஆண்டுகளாகத் தனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்குப் பின்னால் ரசிகர்களின் ஆதரவு இருப்பதை அவர் நினைவில் வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+