Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த், டி.ஆருக்கும் இப்படியொரு பந்தமா? இவ்ளோ நாளா இது தெரியலயே? 500 கோடியை இப்பவே அள்ளிய கூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த்தின் கூலி படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு இப்போதே பிசினஸ் நடந்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். அத்துடன், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கூலி படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கும் பாலாஜி பிரபு, டி ராஜேந்தர் - ரஜினிகாந்த் இடையேயான நட்பு குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கூலி படத்தின் சிகுடு பாடல் வெளிவந்துள்ளது.. அறிவு என்பவர் பாடலை எழுதியிருக்கிறார்.. அனிருத் இசையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.. சூப்பராக பாடல் இருக்கிறது.. டி.ஆர். மூலமாகவே பாடல் ஆரம்பமாகிறது.. டிஆர் செமயா ஆடியிருக்கிறார்.. எந்த காலத்திலும் டிஆர் டான்ஸ் அடிச்சு தூள் கிளப்பிடும்.. வீராசாமி படம் உட்பட யார் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என்று இறங்கி அடிப்பவர் டிஆர்.

Television Rajinikanth t Rajendar

சிகுடு பாட்டில் டான்ஸர்களே ஆட யோசிக்கிற ஸ்டெப்களை அனிருத் அசால்ட்டாக ஆடியிருக்கிறார்.. சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்ததுடன், அவரும் இதில் பெர்பார்ம் செய்துள்ளார்.. மாஸ்டர் சாண்டி, டிஆர், அனிருத் இவர்களுக்கு நடுவில் ரஜினி டான்ஸ் ஆடுவது, என மொத்தமாகவே பாட்டு பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாட்டு படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது-

பாடல் பட்டைய கிளப்புது

கிட்டத்தட்ட 30 மில்லியனுக்கு இந்த பாட்டை ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள்.. இந்த படத்தில் மற்ற எல்லா பாடல்களும் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஒரு பாடலே தந்துவிட்டது. மொத்தத்தில், ரஜினி + லோகேஷ் கனகராஜ் + அனிருத் + நாகார்ஜூனா, அமீர்கான் + உபேந்திரா + சத்யராஜ் + ஸ்ருதி ஹாசன் என பெரிய காம்பினேஷன் நடிகர்கள் உள்ளதால், பெரிய மாஸ் இந்த படத்துக்கு கிடைக்கும்.

இந்த படத்தின் வியாபாரம் மலைக்க வைக்கிறது.. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 90 கோடிக்கு கேட்கிறார்கள்.. இதுவரைக்கும் எந்த படத்துக்கும் நடந்ததில்லை.. படம் மிகவும் நன்றாக வந்துள்ளதால், இந்த படத்தை தாங்களே ரிலீஸ் செய்யலாமா? வெளியில் தரலாமா? என்று யோசித்து வருகிறார்களாம்.

ஆந்திராவில் வியாபாரம்

இதைத்தவிர, ஆந்திராவில் 48 கோடி வியாபாரம் முடிந்துவிட்டது.. இதுவரை எந்த தமிழ்ப்படமும் ஆந்திராவில் இப்படி வியாபாரம் ஆனதில்லை.. இந்த கூலி படம் ரிலீஸ் ஆகும் நாளில்தான், வார்-2 படமும் ரிலீஸாகிறது.

ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்துள்ளார்.. ஜூனியர் என்டிஆர் நடித்தாலே, அவரது படத்துக்கு ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால், ஜூனியர் என்டிஆர் நடித்த வார்-2 படத்தைவிட, ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்குதான் தியேட்டர்களை கொடுக்க ஆந்திராவில் விருப்பப்படுகிறார்கள்.

48 கோடி கொடுத்து வாங்குவதால், எப்படியும் இந்த படம் டபுள் மடங்காக லாபம் தரும் என்று ஆந்திராவில் எதிர்பார்க்கிறார்கள்.

கேரளா வியாபாரம்

கேரளாவிலும் 40 கோடி வியாபாரம் நடந்துள்ளது.. எப்போதுமே கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த படத்தையும் பெற்றி பெற செய்வார்கள்.. கர்நாடகாவில் 32 கோடி ரூபாய்க்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்..

அதேபோல ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் 115 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். இதுவரை தமிழ்ப்பட சரித்திரத்தில் இந்த அளவுக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியதில்லை. . இதில் தமிழ்நாடு தியேட்டர்களில் கலெக்‌ஷன் வரப்போகிறதோ தெரியவில்லை. இப்போதே 500 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.

வெளிப்படையானவர்

டி.ராஜேந்தர் எப்போதுமே வெளிப்படையானவர்... இந்த படத்தில் டி ராஜேந்தரை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் லோகேஷ் கனகராஜூக்கு வந்துள்ளது.. அதனால், ரஜினியிடம் இதை பற்றி சொல்லவும், அவர் ஆச்சரியப்பட்டுள்ளார்..

இதற்கு உடனே சம்மதித்தாலும், சமீபகாலமாக டி.ஆருக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளதே? இந்த நேரத்தில் எப்படி டான்ஸ் ஆடுவார்? என்று கேட்டிருக்கிறார். இதனால் லோகேஷூம் டிஆரிடம் சென்று இதுகுறித்து பேசியிருக்கிறார்.. உடனே டிஆர், ரஜினிக்காக எதையும் செய்வேன் என்று சொல்லி சம்மதித்தார்..

போனில் பேசிய டி ராஜேந்தர்

இந்த பாடல் வெளிவந்த பிறகு ரஜினிகாந்த்தும், டி.ராஜேந்தரும் போனில் பேசிக் கொண்டார்கள்.. இவர்கள் இருவருக்கும் அன்றைய காலத்திலிருந்தே நல்லுறவு இருந்து வருகிறது.. ஒருமுறை பிரபல கட்சியிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பு வலுவாக இருந்தது.. அப்போது ரஜினிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க டிஆர் விரும்பினார்..

இதற்காக ரஜினி வீட்டுக்கு போன் செய்து, டிஆர் பேசுவதாக சொல்லியிருக்கிறார். போனை எடுத்த ஊழியர்கள், யாரோ போனில் கலாய்க்கிறார்கள் என்று நினைத்து போனை வைத்துவிட்டார்கள். மறுபடியும் டிஆர் போன் செய்தபோது, அப்போதும் வைத்துவிட்டார்கள்

3வது முறையாக ரஜினிகாந்த் வீட்டுக்கு போன் செய்த டிஆர், போனை எடுத்தவர்களை திட்ட ஆரம்பித்து விட்டார்... ரஜினிக்கு போன் தர மாட்டீங்களா? என்று சத்தம் போடவும்தான் இதனால் கதிகலங்கிப்போன பணியாளர்கள் உடனே ரஜினியிடம் போனை தந்தார்கள்..

அதற்கு பிறகுதான் போனிலும், மீடியாவிலும் தன்னுடைய ஆதரவை அன்று ரஜினிக்கு தந்தார் டி.ஆர். இப்படியொரு நட்பு அன்றுமுதல் இருவருக்கும் இடையே இருந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+