விஜய்யின் 100 நாள் ஆட்சி பற்றி ரஜினிகாந்த் சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. பாயிண்ட்டை பிடித்த நெட்டிசன்கள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் கொடுத்த பதில் தான் இப்போ சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி நான் அரசியல் பேசவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரிடம் அரசியல் கேள்விகள் தான் கேட்கப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் கொடுத்த எதிர்பாராத பதிலை வைத்து நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருந்தாலும் இன்றைய தலைமுறையினர் சிலர் அவரை சோசியல் மீடியாவில் கலாய்த்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் அவர் என்ன பேசினாலும் அதில் சர்ச்சையை உருவாக்கி வருவதையும் பார்க்க முடிகிறது.
இது குறித்து சமீபத்தில் கூட அவரே மனம் நொந்து பேசி இருந்தார். நான் ஏதாவது விஷயத்திற்கு கருத்து சொன்னாலும் அதில் தப்பு இருக்கிறது என்கிறார்கள், சரி நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் போய்விட்டாலும் கூட அதுவும் தப்பு என்கிறார்கள். நானும் என்னதான் செய்ய என்று அவரே நொந்து போய் தான் பேசி இருந்தார்.
ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை
இந்த நிலையில் தான் சமீபத்தில் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் முதல்வர் விஜய் ஆட்சியில் 100 நாட்கள் கடந்து எப்படி இருக்கிறது என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு ரஜினி, "தேங்க்யூ" என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் போய்விட்டார். இதுதான் இப்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய்க்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு, அதனால் தான் விஜய் தான் முதல்வர் ஆன பிறகு பலரையும் சந்தித்து இருந்தார் ஆனால் தனக்கு ரோல் மாடலாக சினிமாவில் இருந்த ரஜினிகாந்தை போய் சந்திக்கவே இல்லை என்று ஒரு செய்தியும் பரவி வந்தது.

ஏற்கனவே விவாதம்
இதற்க்கு ரஜினியோ அல்லது விஜய் தரப்போ இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில் விஜய் பற்றிய கேள்விகளுக்கு தொடர்ந்து ரஜினிகாந்த் பதில் சொல்லாமல் தவிர்த்து வருவதை பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் பண்ணி வருகின்றனர். அவர்தான் ஏற்கனவே தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று சொல்கிறாரே, அப்படி இருக்கும்போது அவரிடம் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அவர் இதுபோலத்தான் பதில் சொல்வார் என்று கூறி வருகின்றனர்.
ரஜினியே கொடுத்த விளக்கம்
ஒருவேளை விஜய் பற்றிய கேள்விக்கு ஆட்சி நன்றாக இருக்கிறது என்றாலும்.. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ஆனாலும் ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணுகிறாரே என்று சொல்வார்கள். அதேபோன்று ஆட்சியில் இன்னும் பெஸ்ட் வரவில்லை என்று சொன்னாலும் அதையும் வைத்து விமர்சிப்பீர்கள் அதனால் தான் அவர் சம்பந்தமே இல்லாமல் தேங்க்யூ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் என்று ரஜினிகாந்துக்கு சப்போர்ட் பண்ணுகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
ஆனால் ரஜினிகாந்திடம் அரசியல் பற்றி கேட்கிறதற்கு காரணம் ஒரு காலத்தில் அவரும் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்திருந்தவர் தானே? அப்படி இருக்கும் போது ஆட்சி எப்படி இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவரும் குடிமகனாக தனது கருத்தை சொல்வது என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு மனுஷன் இதுபோல பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சம்மந்தமே இல்லாமல் தேங்க்யூ என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். அப்படி இருந்தும் இதை வைத்து இப்போ சோசியல் மீடியாவில் விவாதம் எடுத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
