Coolie: கூலி படத்தில் ரஜினியின் பேட்ஜ் எண் 5821! இது என்னா நம்பர்னு கேட்ட ரஜினி! லோகேஷ் உருக்கம்
சென்னை: கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. அது போல் அந்த படத்தில் ரஜினியின் பேட்ஜ் நம்பர் 5821 என இருக்கிறது. அது என்ன நம்பர் என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த விழாவில் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கலாநிதிமாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி பேசுகையில், நாகார்ஜுனா இந்த வயசுலையும் என்ன ஒரு கலராக இருக்கிறார். எனக்கு முடியெல்லாம் போயிடுச்சு. ஆனால் உங்களோட ஃபிட்னஸின் ரகசியம் என்ன என கேட்டேன். அதற்கு அவர், ஒன்னுமே இல்லை சார். உடற்பயிற்சி மட்டும்தான் காரணம்னு சொல்லிட்டார். அஜித்தின் மங்காத்தா படத்துல வெங்கட் பிரபு ஒரு டயலாக் வச்சிருப்பார். நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறதுனு. அதற்கு ஏற்றார்போல் நாகார்ஜுனா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
நான் கண்டக்டரா இருக்கும் பது என்னோட நண்பன் அவனோட தங்க செயினை கொடுத்து நீ சினிமாவில் நடின்னு சொன்னான். அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில் நான் சிறு வயதில் 10 பைசா கூலிக்காக 100 கிலோ அரிசி மூட்டையை நான் சுமந்தேன் என ரஜினி உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது, இந்த படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு சவுபின் ஷாயிர் தான் பேசுபொருளாக இருப்பார். கன்னட நடிகர் உபேந்திரா இந்த படத்திற்காக நிறைய செய்திருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவை பார்த்துதான் நான் ஃபங்க் வைக்க ஆரம்பித்தேன். ரஜினி சாரை பற்றி இந்த மேடையில் பேச ஒரு மணி நேரம் பத்தாது. ஆனால் நேரம் காரணமாக குறைவாக பேசுகிறேன்.
எனது வாழ்க்கை மாற்றம், நிதானம், அமைதியானதுனா அதற்கு காரணம் ரஜினிசார்தான். அவருடைய பழைய படங்களில் கையில் இருக்கும் பேட்ஜ் 777, 786 இருக்கும். இந்த படத்தில் 5821 என கையில் பேட்ஜ் வைத்தேன். ஒரு நாள் ரஜினி சார் என்னிடம் அந்த பேட்ஜ் நம்பர் குறித்து கேட்டார்.
அது என்னுடைய அப்பாவின் கூலி எண். என் அப்பா கண்டக்டர் என சொன்னேன். என்னாது உங்க அப்பாவும் கன்டக்டரா, இதை என்னிடம் சொல்லவில்லையே என்றார். அதற்கு நான் ஒரு நாள் நீங்கள் கேட்பீர்கள் அது மெமோரபிளாக இருக்கும் என நினைத்தேன் என்றேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.












Click it and Unblock the Notifications