என்னதான் எடிட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?இப்படியா ராஜுவை வச்சி செய்வது
சென்னை: ராஜூவை ட்ரோல் செய்து ரசிகர்கள் கலாய்த்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Recommended Video
பாரதிகண்ணம்மா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ரசிகர்கள் தற்போது ராஜூவை ட்ரோல் செய்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் ட்ரோல் வீடியோஸ்
சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோக்களையும் ட்ரோல் மீம்ஸ்களையும் பார்க்கும்போது பலருக்கும் வியப்பு ஏற்பட்டுவிடுகிறது. அடடே என்று சொல்லும் அளவிற்கு சில நேரங்களில் வீடியோக்கள் பலரையும் திகைப்படைய செய்யும் வகையில்தான் நெட்டிசன்கள் விதவிதமாக மீம்ஸ்களையும் விதவிதமாக வீடியோக்களிலும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அது தங்களுக்கு பிடித்த நடிகர்களாக இருந்தாலும் சரி, பிடித்தவர்களாக இருந்தாலும் சரி தனித்தனியாக அவர்களுக்கு என்று நேரம் மெனக்கெட்டு ட்ரோல் வீடியோக்களை எடிட் செய்து அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்கள்.

இரண்டு சீரியல்களில் நடிப்பு
விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் மூலமாக காலடி எடுத்து வைத்த ராஜு தன்னுடைய நிஜ பெயரை மறந்து கத்தி என்னும் பெயரால் அனைவரையும் கவர்ந்து வந்தார். முதல் சீரியலில் காமெடி கதாநாயகனாக ராஜு அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் அவருக்கு அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. பாரதிகண்ணம்மா சீரியல் சிறு கேரக்டரில் நடித்து இருந்தாலும் ராஜுவை சுற்றிதான் கதை வலம் வந்து வருகிறது. கண்ணம்மாவின் காதலன் ராஜு தான் என்று வெண்பா பாரதியை ஏமாற்றி வைத்திருக்கிறார். அதை வைத்து தான் தற்போது ரசிகர்களும் கலாய்த்து வருகிறார்கள்.

வேற லெவல் எடிட்டிங்
சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது ராஜூவிருக்கு திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது வெற்றி கோப்பையை தட்டி வெளியே வந்துள்ளார். மீண்டும் சீரியலில் வருவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ராஜூ பற்றி பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறது. அவர் மீண்டும் சீரியலில் அறிமுகமாக போகிறார் என்ற செய்திகள் தான் அது. இந்த நிலையில் அதைப்பற்றி ராஜூ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியிடம் கண்ணம்மாவின் குழந்தை தன்னுடைய அப்பா யார் என்று கேட்கும்போது பாரதி தனது போனில் இருக்கும் ராஜுவின் புகைப்படத்தை காட்டி இவர்தான் என்று சொல்வது போலவும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களின் கேள்விகள்
அதே நேரத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி தனது போனில் ராஜுவை பார்த்து அழுது கொண்டிருப்பது போல வீடியோ எடிட் செய்து இருக்கின்றனர். அதுவும் இதயத்திலே தீ பிடிக்கும் எனும் பாடல் பேக்ரவுண்டில் போட்டு ராஜூவை இந்த வீடியோவில் பங்கமாய் கிரியேட்டர்ஸ் கலாய்த்து இருக்கிறார்கள். ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்ததும் முதலில் அதிர்ச்சி அடந்தாலும், இது வேற லெவல் எடிட் என்று கூறி ஷேர் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த வீடியோ உண்மையானது என்று நினைத்து இந்த எபிசோடு எப்போது ஒளிபரப்பாகும் என்று கேட்டு வருகிறார்கள். ராஜூ எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்பது பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications