அமீர் வீட்டில் ராஜூ செய்த செயல்... ராஜுவுக்கு இப்படி ஒரு திறமையா...வியந்து போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமீரை நேரடியாக அவருடைய வீட்டில் ராஜூ சந்தித்துள்ளார்.

அமீர் வீட்டில் ராஜுவின் வியக்க வைக்கும் செயலை பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அமீரை சந்தித்த ராஜு

அமீரை சந்தித்த ராஜு

பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைந்த நிலையில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மீண்டும் சந்தித்து வருகின்றனர். இந்தவகையில் ராஜு தன்னுடைய நண்பனாகவும் தம்பியாகவும் இருந்த அமீரை ஊட்டியில் சென்று சந்தித்துள்ளார். அமீரின் புது குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவருடைய குடும்பத்திற்கு அதிர்ச்சியூட்டும் ஒரு செயலை செய்திருக்கிறார். ராஜு விற்குள் இப்படி ஒரு திறமை என்று அதை பார்த்த ரசிகர்களும் வியந்து போயிருக்கின்றனர்.

அமீருக்கு கிடைத்த ராஜுவின் நட்பு

அமீருக்கு கிடைத்த ராஜுவின் நட்பு

ஒரு டான்ஸ் மாஸ்டராக பலருக்கும் பரிச்சயமான அமீர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதிக அளவில் எதிர்பார்ப்பு இவர் மீது இருந்தது. இவர் அதுவரைக்கும் பலருக்கும் பரிச்சயம் இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் என்ன செய்யப் போகிறார் என்றுதான் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இவர் பல நேரங்களில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி கொண்டிருந்தாலும் இவருடைய சோக கதை மூலமாக அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது ராஜூவின் நட்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார்.

ராஜுவின் திடீர் விசிட்

ராஜுவின் திடீர் விசிட்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராஜு இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று இருந்தாலும், தன்னுடைய மனம் கவர்ந்த போட்டியாளர்களை ஒவ்வொருவராக சென்று சந்தித்து வருகிறார். அந்த வகையில் முதல் முறையாக இமான் அண்ணாச்சியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அடுத்ததாக சிபிஐ சந்தித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது அமீர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அமீர் தவிர எங்களுக்கு ரொம்ப பிடித்தது ராஜு தான் என்று அமீரின் புது குடும்பம் கூறியிருந்தது. தற்போது ராஜுவின் வருகையால் அவர்களும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.

ராஜுவின் வியக்கவைக்கும் ஆட்டம்

ராஜுவின் வியக்கவைக்கும் ஆட்டம்

அமீர் என்னதான் டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் அவருக்கே டப் கொடுக்கும் விதமாக ராஜு டான்ஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அமீர் மற்றும் அவருடைய குடும்பம் மற்றும் அவருடைய டான்ஸ் குழந்தைகளோடு ராஜு கலக்கலான ஆட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோவை ஷைஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ராஜுவின் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்து இது வேற லெவல் சர்ப்ரைஸ் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோக்களை தற்போது ராஜுவின் ரசிகர்களும் அமீர் ரசிகர்களும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+