இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்க கூடாது...இசைவாணிக்கு சூடாக அட்வைஸ் கொடுத்த ராஜூ
சென்னை: பேச வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசக்கூடாது என்று இசைவாணிக்கு ராஜு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
ராஜீவின் அட்வைஸை கேட்டதும் இசை வாணி முகம் மாறிப்போய்விட்டது.
தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முகத்துக்கு நேராக பேசிய ராஜுவை பார்த்ததும் ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

ரசிகர்களை கவர்ந்த ராஜு
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் அணைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு போட்டியாளராக ராஜூ இருந்து வருகிறார். இவர் என்ன பேசினாலும் சரி, அது ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. காமெடியான கேரக்டரால் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இவருடைய மிமிக்கிரி திறமையாலும் எதார்த்தமான காமெடியாளும் எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையையும் இலகுவாக்கி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இமான் அண்ணாச்சிக்கும், இசைவாணிக்கும் அடிக்கடி பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பிடிக்காமல் தான் நடந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் மனதிற்குள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே சிரித்த முகமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரச்சனை தீராது போல
அண்ணாச்சியும், இசைவாணிக்கு இலவசமாக அட்வைஸ் பண்ணுகிறேன் என்று தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் அடிக்கடி கொட்டி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத இசைவாணி மட்டுமல்லாமல் ரசிகர்களும் சில நேரங்களில் ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று யோசித்து வருகின்றனர். கமல் கூட இவர்கள் இருவரின் பிரச்சனையில் இதை தான் கூறியிருந்தார். அதற்கு பிறகு ஒரு சில நாட்களாக இசையின் பக்கம் கவனத்தை திருப்பாமல் இருந்த அண்ணாச்சிக்கு மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை முட்டிக் கொண்டு இருக்கிறது.

ராஜுவின் அறிவுரை
நேற்றைய எபிசோட்டில் அண்ணாச்சியின் பொம்மையை இசைவாணி எடுத்து வைத்துக்கொண்டு எப்படியாவது அவரை விளையாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த வார தலைவர் பதவியில் இருக்கும் இசைவாணி செய்த செயல் சக போட்டியாளர்களையும் குழப்பமடைய செய்திருக்கிறது. அதனால்தான் ராஜு இதற்கான விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு இசைவானணி, அண்ணாச்சியை எனக்கு பிடிக்கும் ஆனால் அவர் இந்த விளையாட்டு விளையாட கூடாது என்று இப்படி செய்தேன் என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்க கூடாது என்று இசைவாணி முகத்துக்கு நேராக அறிவுரை கூறியிருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications