நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மீண்டும் என்ட்ரி ஆகும் ராஜு... எப்போது என விளக்கம்
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டரில் மீண்டும் எப்போது என்ட்ரி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
கத்தியாக ராஜூ களம் இறங்குவாரா? ? என்று ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கத்தி கேரக்டரில் ராஜு அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது பாகம் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகம் ஏற்கனவே பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது. ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் விரைவில் திடீரென்று முடிக்கப்பட்டு இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பாகத்தில் புது கதாநாயகிகள் அறிமுகமானாலும், கதாநாயகனாக அதே செந்தில் தான் நடித்து வருகிறார். அவருக்கு நண்பனாக கத்தி கேரக்டரில் ராஜூ இதுவரைக்கும் நடித்து வந்தார்.

மாற்றப்பட்ட கதைக்களம்
இதுவரைக்கும் கேமராவுக்கு பின்னாடியே வேலை செய்து கொண்டிருந்த ராஜு முதல் முறையாக இந்த சீரியலின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையை ரசிகர்களுக்கு நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீரியலின் கேரக்டரில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், சீரியலில் இவருடைய கதைக்களத்தை மாற்றிவிட்டனர். இவர் துபாய்க்கு வேலைக்கு சென்று இருப்பதாக கதை மாற்றப்பட்டது. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் நடிப்பார் என்பதற்காகவே இவருக்காக புதுநடிகர் யாரையும் அறிமுகப்படுத்தாமல் சீரியல் அணி இருந்து வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்ற பிறகு தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் வெளியே வந்ததும் எப்போது மீண்டும் கத்தி சீரியலில் வருவார் ?? என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த இடத்திற்கு வருவதற்காக கஷ்டங்களையும் பல துயரங்களையும் அனுபவித்து வந்த ராஜு இனி வெள்ளித்திரையில் கதாநாயகனாக வருவாரா?? அல்லது மீண்டும் இந்த சீரியலில் வருவாரா?? என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருகிறது.

ராஜுவின் விளக்கம்
தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடன் சீரியலில் ஒன்றாக நடிக்கும் காயத்திரியும் இதே கேள்வியை ராஜுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கண்டிப்பாக வருகிறேன். ஆனால் நான் வரும் சீன்களை ஒரு வாரத்திற்கு சஸ்பென்ஸில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று தனக்கே உரிய குறும்பு தனத்தோடு கலாய்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நான் மட்டும் முடிவு செய்தால் முடியாது. சீரியல் அணியினரும் எனக்காக கதை எழுதினால் நான் கண்டிப்பாக சீரியலில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications