எதார்த்தமாக பேசிய தாமரை..ஓங்கி அறைந்த ராஜு... ரசிகர்கள் இதை எதிர்பார்க்கலையே
சென்னை: டாஸ்கில் தாமரை பேசியதை கேட்டு ஓங்கி அறைந்து விட்டார் ராஜு.
குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த தாமரை இதை எதிர்பார்க்கவில்லை.
ராஜுவுக்கு இவ்வளவு கோபம் வருமா என்று ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

அன்சீன் சினிமா சினிமா டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதவிதமான டாஸ்க்கள் பிக்பாஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது சினிமா சினிமா என்னும் ஒரு டாஸ்க் அனைவரையும் குதூகலபலப்படுத்தி வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மறந்து ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். பலர் செய்யும் துறுதுறுப்பான சேட்டைகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

எம் ஆர் ராதா கெட்டப்பில் ராஜு
ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக வைத்திருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக ராஜு இருந்து வருகிறார். இவர் என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள், இவர் தற்போது எம் ஆர் ராதாவின் கெட்டப்பில் வருவதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இவருடைய அசத்தலான மிமிக்கிரி திறமையால் இவர் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். அடிக்கடி போட்டியாளர்கள் தான் என்ன கேரக்டர் என்பதை மறந்து இந்த வீட்டிற்குள் தன்னுடைய நிஜ கேரக்டரில் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் அனைவருக்கும் ஞாபகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

சந்திரமுகியாக மாறிய இசைவாணி
இதுவரைக்கும் அதிகமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டாத போட்டியாளர்கள் கூட இந்த டாஸ்கில் தங்களுடைய திறமையை நன்றாக வெளிக்காட்டி வருகின்றனர். அதுமாதிரிதான் இசைவாணி, சந்திரமுகி கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அப்படியே சந்திரமுகியாக மாறி விட்டார் போல. தரையில் உட்கார்ந்து இவர் பேசும் பேச்சை பார்த்து பலர் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர். அவருக்கு கம்பெனி கொடுக்கும் விதமாக அவரிடம் ராஜூ பேசிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பிடித்த எபிசோட் ஆக இருந்து வருகிறது.

என்னா....அடி
முழுசா சந்திரமுகியாக மாறியிருக்கும் இசைவாணியிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து நழுவிய, ராஜுவிடம் வந்து மாட்டி இருக்கிறார் தாமரை. தாமரை எதார்த்தமாக 'என்ன அப்பு' என்று கேட்க, ராஜு, தாமரையில் கன்னத்தில் அறைந்து விட்டார். என்ன நடந்தது என்று புரியாமல் தாமரை விழித்துக்கொண்டு எதற்காக என்னை அடித்தாய் என்று கேட்டதற்கு நீ தானே அப்பு என்று சொன்னாய். அதான் அப்பி விட்டேன் என்று இவர் தனக்கே உரிய குறும்போடு பேசியதை கேட்டு பலர் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பல நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த மாதிரி சிரிப்பு காமெடிகள் வலம் வருவது நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications