பல்லு கூட விளக்காமல் படுக்கையில் புரண்டபடி.. ரக்ஷாவின் கலகல ரகளை!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவியாக கலக்கிய ரக்ஷா ஹோலா தற்போது இன்ஸ்டாகிராமில் அம்மன் வேடத்தில் ரசிகர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாராம்.
அது மட்டுமா... தூங்கி எழுந்ததும் பல்லு கூட விளக்காமல், படுக்கையில் படுத்தபடி போட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவரை சீரியலில் காணாது தவித்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வரம் அளித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவர் சீரியலுக்குத் திரும்புகிறார். இதுதொடர்பாக போடப்பட்டுள்ளதுதான் அந்த அம்மன் அருள் பாலிக்கும் கோலம்.

பட்டையைக் கிளப்பிய தேவி
நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி 1 சீரியல் பட்டையை கிளப்பிக்கொண்டு டி ஆர் பி யில் முதலிடத்தில் இருந்தது .ஆனால் இந்த ஊரடங்குக்குப் பிறகு இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப் பட்டு, இரண்டாவது பகுதி ஆரம்பித்து அது இப்போ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் தேவி இல்லை.. அதாவது தேவியாக நடித்த ரக்ஷா இல்லை.. மாறாக ரட்சிதா வந்து விட்டார்.

தேவி எங்கே
ரசிகர்கள் எல்லோரும் முதல் பகுதியில் கலக்கிய தேவி - மாயனை தான் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பும் அவ்வளவு தத்ரூபமாக இருந்ததால் ரசிகர்கள் இவர்களை ரொம்பவும் ரசிக்க வந்தார்கள். இவர்களின் காதல் சண்டை காட்சிகளும் எப்போதும் அழுது கொண்டிருக்கும் சீரியல்களுக்கு மத்தியில் இது ஒரு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது.

ரக்ஷா போய் ரட்சிதா
ஆனால் திடீரென்று இந்த சீரியலில் தேவியாக நடித்த ரக்ஷா நிறுத்தப்பட்டு விட்டதால், அவர் இல்லாமல், ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்களாம். இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாவில் கேள்வி கேட்காத ரசிகர்களே கிடையாது. அவரும் சளைக்காமல் பதிலளித்து வந்தார். நான் விரைவில் மீண்டும் சீரியலுக்கு வருவேன் என்றும் அதுவரைக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் தனது ரசிகர்களிடம் முழு கவனத்தைச் செலுத்துவேன் என்று கூறியிருந்தார்.

மிஸ் யூ தேவி
அதன்படி இன்ஸ்டாகிராமில் சில போஸ்டர்களை போட்டு ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இப்போது அம்மன் வேடத்தில் ஓணம் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் ரக்ஷா. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள். மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கி விட்டீர்களா என்றும் இது முருகன் திருவிளையாடல் சீரியல் தானா என்றும் பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அம்மன் வேடத்தில் அருள்
ரக்ஷா அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அம்மன் திருவிழா சீரியலா என்றும் பலர் கேட்டுள்ளனர். விஜய் டிவியில் வரப் போகிறீர்களா என்றும் கேட்கின்றனர். அவரது வருகைக்கு ரசிகர்களிடையே இத்தனை காத்திருப்பது இருப்பது ஆச்சரியம்தான். இவர் தாய்மொழியான கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் தமிழ் சீரியல் மூலமாக தான் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக இருக்கிறது.

லவ்வுன்னா லவ்வு
இவருக்கு சூர்யா தான் ரொம்பவும் பிடிக்கும். இவரை எல்லோரும் செல்லமாக குஷ்பு இட்லி என்று கூப்பிடுவார்கள். அது இவருக்கு கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கும். இவருக்கு கல்யாணமாகி விட்டது. இவருக்கு காலேஜில் படிக்கும்போது காலேஜில் சேர்ந்த பத்து நாட்களிலேயே அஞ்சாறு பேரு லவ் ப்ரொபோஸ் பன்னி இருக்கிறார்களாம். ஆனால் கட்டிய கணவர் இதுவரை லவ் புரபோசல் செய்ததே இல்லையாம்.

அவர் மட்டும் சொல்லவே இல்லை
எல்லோரும் என்னிடம் லவ்வைச் சொல்லியுள்ளனர். ஆனால் என் கணவர் என்னிடம் இன்னும் லவ் ப்ரொபோஸ் பண்ணவில்லை என்று கொஞ்சம் செல்லமாக அலுத்துக் கொள்கிறார் ரக்ஷா. தற்போது இவர் வீட்டில் ஹாயாக, ஓய்வாக இருப்பதால் நன்றாக தூங்கி தூங்கி எழுகிறாராம். இப்படித்தான் இப்ப ஒரு வீடியோ போட்டுள்ளார்.

படுக்கையில் புரண்டபடி
படுத்துத் தூங்கி எழுந்ததும் பல்லைக் கூட விளக்கப் போகாமல் அப்படியே பெட்டிலேயே புரண்டு ஒரு வீடியோ போட்டுள்ளார். அந்தப் பாட்டுக்கு ஏற்ற மாதிரி வாயசைத்து அவரும் ஜாலியாக அந்தப் பாடலை அனுபவித்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு இருக்கிறார். இதுவும் காட்டு தீ போல பரவி வருகிறது. மேக்கப் எதுவுமில்லாமலும் கூ ரக்ஷா கொள்ளை அழகுல்ல என்று ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசிக்கிறார்கள்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications