ரம்யா கிருஷ்ணன் ரசிகைங்க என்னை அடிக்க வந்துட்டாங்க... வம்சம் ஜெயஸ்ரீ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பரத நாட்டிய கலைஞர், அதோடு நடிகையும் கூட. இவர் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் ரம்யாவுக்கு கொடூர வில்லியாக நடிச்சார்.

குடும்ப பெண்களுக்கு இவர் மீது கொள்ளை ஆத்திரம் வரும் அளவு அந்த ரோல் இருக்கும். எப்படா கையில கிடைப்பார் வெளுத்துக் கட்டலாம்னு காத்திருந்த ரம்யா கிருஷ்ணன் ரசிகைகள், ஒரு நாள் ஷாப்பிங் போன இவரை கட்டம் கட்டிடங்களாம்.

அந்தக் கூத்தை ஏன் கேட்கறீங்க என்று அங்கலாய்த்த ஜெயஸ்ரீ ஈஸ்வர், அந்த அளவுக்கு ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் இருக்காங்க என்றும் செல்லமாக அலுத்துக் கொண்டார். பிறகு அந்த சம்பவத்தை சுவாரஸ்யமாக விவரித்தார்.

மகள் ரெத்வா

மகள் ரெத்வா

இவரது கணவர் ஈஸ்வர் ஜீ தமிழ், ஜெயா டிவி சீரியல்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்க, ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகள் ரெத்வாவுடன் கலந்து கலக்கி வருகிறார் ஜெயஸ்ரீ.

அம்மாக்கள்

அம்மாக்கள்

சின்னத்திரையில் நடிக்கும் அம்மாக்கள் தங்களது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கலாம். மெட்டி ஒலி புகழ் வனஜா, கிருத்திகா என்று பலரும் கலந்துகொண்டு குழந்தைகளுடன் மகிழும் இந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீயும் இருக்கிறார்.

ஒரே மாதிரி உடை

ஒரே மாதிரி உடை

அம்மா குழந்தைகளுக்கு ஒரே மாதிரி உடை என்பது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனாவும் தன் மகளுடன் இந்த நிகழ்ச்சியை ஒரே மாதிரி உடை அணிந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோபம் வராது

கோபம் வராது

வம்சம் சீரியலில் டைரக்டர் வில்லி மாதிரி பேச சொன்னா கீச் கீச்னு எலி மாதிரி பேசுறீங்க... முகத்துல கோபம், குரலில் வேகம்னு விரட்டிகிட்டே இருந்தார். சத்தியமா எனக்கு அதிர்ந்து கூட பேச வராது. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.

வில்லின்னு நம்பிக்கை

வில்லின்னு நம்பிக்கை

ஒரு ஷாப்பிங் மாலுக்கு போனேன், அங்கதான் ரம்யா மேடம் ரசிகைங்க என்னை அடிக்க கட்டம் கட்டிட்டாங்க. அப்புறம், நடிப்புதாங்கன்னு அங்க இருந்தவங்க சொல்லி என்னை அடி வாங்காம தப்பிக்க வச்சாங்க. அப்போதான் நாம சீரியல் வில்லிதான்னு எனக்கு நம்பிக்கை வந்துசுச்சு.

ரம்யா மேடம்

ரம்யா மேடம்

செட்ல ரம்யா மேடம் சிரிச்சுகிட்டே இருப்பாங்க. நாங்க எல்லாம் நல்லா கலாய்ப்போம். கோபமே வராது. ஒரு நாள் கூட யூனிட்ல கோபப்பட்டது கிடையாதுங்க. குழந்தை மனசு எது சொன்னாலும் சிரிப்பாங்க. அவங்க சிரிச்சு முடிக்கட்டும்னு, வெயிட் பண்ணி ஷாட் எடுப்பாங்க. இத்தனைக்கும் அவங்கதான் தயாரிப்பாளர்.

நோ டென்ஷன்!

நோ டென்ஷன்!

சீன் ஏதாவது சொதப்பிருச்சுன்னா டைரக்டர் பதட்டமானாலும், எதுக்கு டென்சன்? இன்னொரு தடவை நடிச்சுட்டா போச்சுன்னு... டைரக்டர் சொல்றதுக்கு முன்னாடியே ஷாட்டுக்கு ரெடியாவாங்க... அவங்களோட வளர்ச்சிக்கு இந்த டெடிகேஷன்தான் காரணம் என்கிறார் ஜெயஸ்ரீ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+