சீ போங்க ரம்யா.. இந்த மாதிரி பண்ணாதீங்க.. முகம் சுளிக்க வச்சிட்டாரே இப்படி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக சூப்பராக நடித்திருந்தாலும் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்தது .அதுவும் ஒரே போஸ்ட்ல அனைவர் மனதையும் தூக்கி விட்டார்.

அதனால்தான் அவரை இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இறக்கி இருக்கிறார்கள் ஆனால் இன்றைய ப்ரோமோவில் அவர் அழுததை பார்த்து பல ரசிகர்களும் பல விதமாக பேசி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் இடுப்பை காட்டி ஒரு போஸ்ட் தான் போட்டார். அது வேற லெவலில் வைரலாகி யாருடா இந்த பொண்ணு என்று சர்ச் பண்ணி பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இடுப்பு நிழலுக்கு பக்கத்தில் கூட இல்லையே

இடுப்பு நிழலுக்கு பக்கத்தில் கூட இல்லையே

அந்த இடுப்பு போட்டோவுக்குப் பிறகு பலரும் அவருடைய பாணியை கையாண்டாலும் யாரும் இவருடைய இடுப்பு நிழல் பக்கம் கூட வர முடியவில்லை. இடுப்பழகி ரம்ய பண்டியன் என்று ஒரு அடையாளத்தோடு உலா வந்து கொண்டிருந்தார். திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரை இன்ஸ்டாகிராம் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்துதான் இவருக்கு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

இவருடைய ரசிகர்களின் ஆசையை தீர்ப்பதற்காக மீண்டும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு குழுமை காட்டிக் கொண்டிருந்தார். இவ்வளவு பிஸியாக இருந்த வரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாக போகிறார் என்று சொன்னதும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

கிளுகிளுப்பு

கிளுகிளுப்பு

இவருக்கு இணைய தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இவரை இந்த வீட்டிற்குள் வைத்தால் இளைஞர்கள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பு ஏற்படுத்தி விடலாம் என்று தான் இவரை கணக்காக பிளான் போட்டு தூக்கி இருக்கிறார்கள் என்றாலும் இந்த வீட்டிற்குள் இவர் ரொம்ப நல்ல பிள்ளைதான் நடந்து கொண்டு இருக்கிறார்.

தனிக்காட்டு ராஜா

தனிக்காட்டு ராஜா

இந்த நிகழ்ச்சி ஆரம்பமான புதிதில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். பலருடன் இவருக்கு சண்டை சச்சரவு வந்தாலும் அவருடைய கேரக்டரை ஒரே இடத்தில் சரியாக புரிந்து கொண்டு கேள்வி கேட்டு அவரை மடக்கி விட்டார். அது இவருடைய ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வந்தது.

பிள்ளைக்கு அம்மா ஞாபகம்

பிள்ளைக்கு அம்மா ஞாபகம்

ரொம்ப அறிவு இருக்கு அதனாலதான் இந்த அளவிற்கு இறங்கி யோசித்திருக்கிறார் சரியான நேரத்தில் சரியான கேள்விகளையும் கேட்டு இருக்கிறார் என்று அவர் ரசிகர்களை மட்டுமல்லாமல் கமலும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார். இன்றைய எபிசோடில் யாரெல்லாம் இந்த நேரத்தில் யாரை ரொம்பவும் மிஸ் பண்ணுறீங்கள் என்று கேள்வி கேட்டதற்கு இவர் மேடையில் ஏறி தனது அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கூறி கதறி அழுதுவிட்டார்.

கண் கலங்கிருச்சே கண்ணுக்குட்டி

கண் கலங்கிருச்சே கண்ணுக்குட்டி

இந்த சீசனில் தற்போது சண்டைக்காட்சிகளும் அழுகை காட்சிகளும் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் நிலையில் இவருடைய அழுகையும் இன்று தட்டி விட்டதால் அவருடைய ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டார்கள் .எப்பவும் சிரிச்ச முகமா செம ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் கண்னு குட்டியை இந்த அளவிற்கு மிரள வைத்து விட்டீர்களே அங்கு கண்ணீர் வழிந்தால் இங்கு ரத்தம் வழிகிறது என்றும் சிலர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+