ரம்யா பாண்டியன் விஷ பாட்டிலா.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. செம ஆட்டமா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ணா விட்டாலும் ரம்யா பாண்டியன் மீண்டும் மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் என்பது இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு கிடைத்த வரவேற்பு தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதுவும் இன்ஸ்டாகிராமில் ரம்யாபாண்டியனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த சீசனில் முதல் நாளில் தொடங்கி கடைசி நாள் வரைக்கும் இருந்த ஒரே ஒரு பெண் இவர்தான்.

இந்த பெருமையையும் பிக்பாஸ் வீட்டின் சிங்கப் பெண் என்னும் பட்டத்தையும் பெற்று இந்த வீட்டை விட்டு வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

செண்டை முழங்க

செண்டை முழங்க

அதுவும் தாரை தப்பட்டை முழங்க சென்டா மேளத்தோடு விமர்சனமாண விமர்சன வரவேற்பு இருந்திருக்கிறது. இந்த வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இவருக்கு ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது .அதன் பிறகு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தார்.

நிலைத்து நின்ற ரம்யா

நிலைத்து நின்ற ரம்யா

சில ஹேட்டர்ஸ்கள் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவினால் தான் இவரால் கடைசி வரை இந்த வீட்டில் நிலைத்து இருக்க முடிந்தது. இந்த வீட்டிற்குள் இவர் யாருடைய சாயலும் இல்லாமல் தன்னுடைய முழு கேரக்டரையும் அப்படியே வெளிக்காட்டி இருப்பதால் சில நேரங்களில் நெட்டிசன்கள் இவரை நரி பாண்டியன் மட்டும் விஷ பாட்டில் என்றும் கலாய்த்து வந்தனர் .

வெறித்தனமான ரசிகர்கள்

வெறித்தனமான ரசிகர்கள்

இருந்தாலும் இவருடைய ரசிகர்களின் சப்போர்ட் இவருக்கு முழுக்க முழுக்க இருந்துகொண்டுதான் இருந்தது .அதுவும் வெறித்தனமான ரசிகர்கள் அவருக்காக ஓட்டு போட சொல்லி கடையில் தள்ளுபடி எல்லாம் வைத்த வீடியோக்கள் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி வைரலாக பரவி வந்தது . அந்தவகையில் இவர் வெற்றி பெறாவிட்டாலும் கடைசி நாள் வரைக்கும் இருந்து ஜெயித்து விட்டார் என்று இவருடைய ரசிகர்களும் உறவினர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

பலத்த வரவேற்பு

பலத்த வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் வெளியே வந்த கன்டஸ்டன்ட் ஒவ்வொருவருக்கும் வீட்டில் சிறப்பான வரவேற்பு வழங்கி அதை அப்படியே வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர் .அந்த வகையில் தற்போது தங்கபாண்டியனின் வரவேற்பு தான் பெருமளவில் வைரலாக இருக்கிறது .இதை பார்த்த நெட்டிசன்கள் வயிறு எரிந்து இது என்ன டைட்டில் விண் பண்ணுனவர்களுக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு இல்லை இவருக்கு இவ்வளவு வரவேற்பா என்று புகைந்து கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு ரம்யாபாண்டியனின் ரசிகர்கள் வெறித்தனமான பதிலை அளித்து வருகிறார்கள் .

கொஞ்சல் ஆரம்பம்

கொஞ்சல் ஆரம்பம்

இந்த வீட்டிற்கு இவர் இருக்கும்போது கழுவி கழுவி ஊத்தியவர்கள் கூட தற்போது மீண்டும் கொஞ்ச ஆரம்பித்து விட்டார்களாம். மீண்டும் தலைவி இன்ஸ்டாகிராமில் இனி கொடி கட்டி பறப்பார் என்பதுதான் அவர்களின் ஆசையாக இருந்து வருகிறதாம். தன்னுடைய செல்லமான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது இந்த வீட்டிற்குள் அதே சிரிப்பு சிரித்தே பலரை முகத்திரையை கிழித்து விட்டார் .

சொக்க வைத்த ரம்யா

சொக்க வைத்த ரம்யா

அதனால் தான் இவருடைய ரசிகர்கள் இவரை அடிச்சிக்க யாராலயும் முடியாது .எங்க தலைவி தான் வேற லெவல் என்று கொண்டாடி வந்தனர் .தற்போது ரம்யாபாண்டியனின் வரவேற்பு வீடியோவில் அவர் ரசிகர்களுக்கு கூடுதல் கவர்ச்சியைக் காட்டி கருப்பு கலரில் உடை அணிந்து ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து சிலரால் கண்ட்ரோல் பண்ண முடிய வில்லையாம்.

மறுபடியும் களத்தில்

மறுபடியும் களத்தில்

அந்த அளவிற்கு மீண்டும் களம் இறங்க தயாராகி விட்டார். ஆனாலும் நெட்டிசன்கள் இவருக்கு விஷ பாட்டில் என்று பெயர் வைத்திருப்பதை அவருடைய ரசிகர்களால் பொறுக்க முடியவில்லையாம். ரம்யா பாண்டியன் சும்மா இருந்தாலும் கூட அவர்கள்தான் கொதித்தெழுந்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போர் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+