ரசிகர்கள் கொடுத்த சூப்பர் பரிசு.. பார்த்து அப்படியே புல்லரித்துப் போன ரம்யா பாண்டியன்!
சென்னை: சிரிப்பழகி ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் பிறந்தநாள் பரிசாக அவருடைய ஃபேமிலி போட்டோவை கொடுத்து அவரை சென்டிமென்ட் அட்டாக் பண்ணிவிட்டார்கள்.
என்னதான் சிரித்துக்கொண்டே இருந்தாலும் அவருக்குள் இருக்கும் எமோசனல் இந்த அழகான நேரத்தில் வெளிப்பட்டு விட்டது.
சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் இப்போது வெகு விமர்சனமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள்
சிரிப்பழகி என்றும் சிங்கப்பெண் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது இளைஞர்களின் இதயத் துடிப்பாக வலம்வந்து கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஒவ்வொருநாளும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று கேலண்டர் தாளை புரட்டிப் பார்த்து மனக்கணக்கு போட்டு வந்தனர். அவ்வளவு ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை அவருடைய வாழ்க்கையில் மறக்காத படி சிறப்பாக கொண்டாடி விட்டனர்.

அழகுக்கு பஞ்சமில்லை
திரைப்படங்களில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ரம்யா பாண்டியனுக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது எல்லாமே போட்டோ சூட் தான். அவருடைய நடிப்பையும் தாண்டி மென்மையான அழகை ரசிக்க ஆரம்பித்தது, மொட்டமாடி போட்டோ சூட்டில் தான். எத்தனையோ பேர் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு இருந்தாலும், இவருடைய போட்டோ சூட் தான் பெரும் வைரலாக மாறிவிட்டது. அதற்கு முன்பு இவர் கிராமத்து தேவதையாக ஜோக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது இவரை அந்த அளவிற்கு கண்டுகொள்ளாத ரசிகர்கள் கூட மொட்டமாடி போட்டோவை பார்த்து யாருடா இந்த பொண்ணு என்று சல்லடை போட்டு தேட ஆரம்பித்துவிட்டனர்.

யாரால் யாருக்கு பெருமை
போட்டோ ஷூட்டில் இவருக்கு கிடைத்த பெயருக்கு பிறகு இவருக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவிதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் ஒரு கன்டஸ்டன்ட்டாக கலந்துகொண்டு புகழுடன் செமையாக பர்பாமன்ஸ் பண்ணிவிட்டார். இவரால் புகழுக்கு பெருமையா அல்லது புகழால் இவருக்கு பெருமையா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவில் இருவருமே வேற லெவலில் கலக்கி விட்டனர். இந்த நிகழ்ச்சியில் இவருடைய எபிசோடுகளை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர்.

அதிகரித்த ரசிகர்களின் ஆதரவு
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரும் பேரையும் புகழையும் வாங்கி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் உச்சம் தொட்டு விட்டார். ரசிகர்களின் மனதில் சிங்கபெண் ஆகவும் இடத்தை பிடித்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் இவர் தன்னுடைய கெத்தான கேரக்டரால் அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டார். இவருடைய பெயரைச் சொல்லும்போதெல்லாம் கலக்கலான புன்னகையை பலருக்கு கண்முன் வந்து போகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருப்பதற்கு அவருடைய ரசிகர்களும் பெரிய காரணம் தான். ஒவ்வொரு நாமினேஷனிலும் இவருக்கு அதிகமான ஓட்டுகளை அளித்து தங்களுடைய அன்பை வெளி காட்டி வந்தனர்.

சிரிப்புக்குள் மறைந்திருக்கும் மர்மம்
பிக் பாஸுக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உருவாகி விட்டாலும் தான் வந்த இன்ஸ்டாகிராமை இவர் மறந்துவிடவில்லை. தனக்குப் பெரும் பெயரையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் வாங்கி கொடுத்தது இதுதானே, அதனை மறந்து விடுவாரா!!??அதனால்தான் அடிக்கடி போட்டோக்களை எடுத்து அதில் அப்லோட் செய்து வருகிறார். எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் இதில் இவர் அடிக்கடி போஸ்ட் போடுவதில் தவறுவதில்லை. அதிலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பலர் இவருடைய பெயரிலேயே ஃபேன்ஸ் பேஜ்களை வைத்திருக்கின்றனர். இப்படி பல ரசிகர்கள் இவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தனர்.

செல்லத்த ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே
ரம்யா பாண்டியனும் தன்னுடைய ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் தான் இருக்கிறார். அதனால் தான் தற்போதைய இவருடைய பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் பலர் ஒன்றிணைந்து இவரை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர். ரம்யா பாண்டியன் அவருடைய மற்றும் அப்பா அம்மா ஆகியோர் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்து அதை பெரிய அளவில் லேமினேஷன் செய்து கிப்ட் கொடுத்திருக்கின்றனர். இந்த போட்டோவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு போன ரம்யா பாண்டியன் பேச வார்த்தையின்றி தவித்திருக்கிறார். எப்போதுமே சிரித்த முகமாக இவரை பார்த்து வந்த ரசிகர்களால் தற்போது இவருடைய தவிப்பை பார்க்க முடியாமல் அவர்களும் தவிக்கின்றனர். பிறந்தநாள் அதுவுமாக இன்ப அதிர்ச்சி கொடுத்து இப்படி ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே.












Click it and Unblock the Notifications