ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் கல்யாணமாம்! எங்க நடக்குது தெரியுமா? அதுவும் மாப்பிள்ளை மாஸ்டராமே!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது குறித்த உறுதியான தகவலை ரம்யா பாண்டியன் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார் என்ற தகவலை பார்க்கலாம்.
கொரோனா காலகட்டத்தை அவ்வளவு சீக்கிரமாக மக்கள் மறந்து விட முடியாது. அந்த காலகட்டத்தில் பலர் கஷ்டங்களையும், துயரங்களையும் பட்டிருந்தாலும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரிய அளவில் பெயர் வாங்கியது ரம்யா பாண்டியன் தான். கொரோனாவால் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த நேரத்தில் வீட்டு மொட்டை மாடியில் காத்து வாங்கி இடுப்பு தெரிய எடுத்த புகைப்படங்கள் ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

புடவை கட்டிக்கொண்டு இடுப்பு தெரிகிற மாதிரி ரம்யா பாண்டியன் எடுத்த புகைப்படங்கள் பல இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுப்பது என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டோ சூட் எடுப்பதற்கு முன்பு ஜோக்கர் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் பலருக்கும் தெரியவில்லை. ஆனால் மொட்டை மாடி போட்டோ சூட்டுக்கு பிறகு இவர் யார் என்று பலர் தேடத் தொடங்கி விட்டனர்.
நடிகர் அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் என சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் போட்டோ சூட் மூலமாக கிடைத்தது. இதன் மூலமாகவே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் தயவால் அதிகமான நாட்கள் இருந்தார். இவர் தற்போது சில திரைப்படங்களிலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

இதனாலே சினிமாவில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார் போல. ஆமாங்க இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கப்போகிறதாம். லாவால் தவான் என்பவரை தான் திருமணம் செய்ய போகிறாராம். தவான் யோகா பயிற்சி மாஸ்டராக இருக்கிறாராம்.
வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்லி கொடுக்கும் மோட்டிவேஷனராகவும் தவான் இருக்கும் நிலையில் அவரோடு அடுத்த மாதம் நவம்பர் 8ம் தேதி இமயமலை ரிஷிகேஷ் அருகில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் ரம்யா பாண்டியன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications