திரிஷாவோடு தியேட்டரில் கலக்கல்! “விடாமுயற்சி” அஜித் பற்றி VJ ரம்யா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ரம்யா சுப்ரமணியன் நடிகர் அஜித் குமார் மற்றும் திரிஷா நடித்து இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அஜித்தோடு நடித்த அனுபவம் குறித்து ரம்யா சுப்ரமணியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவிற்கு அதிகமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் ப்ரொடக்ஷன் செய்து அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

vidaamuyarchi ajith kumar trisha

விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அதிலும் அஜித்துடைய தோற்றத்தின் வித்தியாசம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது. அதோடு அந்த படத்திற்காக நடைபெற்ற சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், கார் ரேஸ், அர்ஜூனின் கம்பீரம், த்ரிஷாவின் காதல் போன்ற கிளிப்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று (பிப்ரவரி 6) காலையில் இந்த திரைப்படம் வெளியான நேரத்தில் இருந்து பாசிட்டிவான கமெண்ட்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் "பிரேக் டவுன்" என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்ட நிலையிலும் அஜித்குமாரின் நடிப்பு மற்றும் ஆக்சன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பல நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் பட வெளியீட்டை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அஜித்தோடு எத்தனையோ படங்களில் திரிஷா நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இருவருக்கும் திருமணம் முடியாதது போன்ற காட்சிகள் இருந்தது.

vidaamuyarchi ajith kumar trisha

ஆனால் இந்த திரைப்படத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த தொகுப்பாளினியான விஜே ரம்யா பாலசுப்பிரமணியம் அஜித்தோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் ஒரு பதிவில் அஜித்தோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா அதற்கு, "கனவுகள் செயல்களாக மாறும்போது... சமீபத்தில் இந்த நம்ப முடியாத நபருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் இன்னும் என்னை கிள்ளுகிறேன். இப்போது இந்த அற்புதமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள். ஏகே சார் ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று நீங்கள் என்று எங்களுக்கு ஊக்கம் அளித்தீர்கள்" என்று பகிர்ந்து இருக்கிறார்.

ரம்யா சுப்பிரமணியன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு "ஓ காதல் கண்மணி" திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்.

vidaamuyarchi ajith kumar trisha

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதிலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இப்போது அஜித்தோடு விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் இந்த நிலையில் இன்று திரைப்படம் வெளியாகும் போது நடிகை திரிஷாவோடு சேர்ந்து ரம்யாவும் படம் பார்க்க வந்திருக்கிறார். அப்போது பலர் வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கும் ரம்யா சுப்ரமணியனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிப்பு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் செலுத்தும் ரம்யாவின் விடாமுயற்சிக்கு இப்போது விடாமுயற்சி படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது பலருடைய பாராட்டாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+