"பாடினதுக்கு கைது பண்ணுறாங்கய்யா!" அமைச்சர் வன்னி அரசுவிடம் பாடகர் வேடன் வேதனை.. பின்னணி சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து எழுந்த ஒரு ராப் குரல் இன்று தமிழ்நாட்டிலும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சமூக நீதி, சாதி ஒடுக்குமுறை, ஏழை மக்களின் வாழ்க்கை, அரசியல் விழிப்புணர்வு போன்ற கருத்துகளை தன்னுடைய பாடல்களின் மூலம் துணிச்சலாக பேசி வரும் பிரபல ராப் பாடகர் வேடன், தற்போது தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவை நேரில் சந்தித்திருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதிலும் இந்த சந்திப்பின் போது நடந்த சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Vedan Vanni Arasu Rap Music Social Justice Tamil Nadu Politics

ராப் பாடகர் வேடன் வருத்தம்

அமைச்சர் வன்னி அரசுவை சந்தித்த வேடன், தனது வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தான் பாடும் பாடல்களுக்காக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், கைது நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

"நான் பாடின பாடல்களால்தான் பல பிரச்சனைகளை சந்திக்கிறேன். என்னுடைய குரலை அடக்க முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது" உங்களை நான் சந்திக்க வந்த காரணமே, நான் பாடுனதுக்காக என்னை கைது பண்ணுறாங்க சார்... அதற்கு நீங்க நடவடிக்கை எடுக்கணும் அதற்காகத்தான் என்று சொல்லி இருக்கிறார்.

பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர்

இந்த சந்திப்பின் போது அமைச்சர் வன்னி அரசு, வேடனை அன்புடன் வரவேற்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வேடனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததோடு மட்டுமல்லாமல், அவருடன் வந்த குழுவினரையும் வரவேற்று சிறிது நேரம் உரையாடியுள்ளார்.

அதன்பிறகு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு, மிகவும் இயல்பான சூழலில் கலந்துரையாடல் நடைபெற்றது. அரசியல்வாதி - கலைஞர் சந்திப்பு என்பதைக் காட்டிலும், நண்பர்களைப் போல அமர்ந்து பேசிய அந்த காட்சிகள்தான் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Vedan Vanni Arasu Rap Music Social Justice Tamil Nadu Politics

வைரலாகும் வீடியோக்கள்

வேடனும், அமைச்சர் வன்னி அரசும் ஒன்றாக அமர்ந்து பேசும் காட்சிகள், பொன்னாடை அணிவிக்கும் தருணம், சிற்றுண்டி சாப்பிட்டபடியே உரையாடும் வீடியோக்கள் என பல காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

"வேடனின் குரலை கவனமாக கேட்ட அமைச்சர்", "பாடகருக்கு அளிக்கப்பட்ட மரியாதை", "சமூக நீதி குறித்து பேசும் இருவரின் சந்திப்பு" போன்ற தலைப்புகளில் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

யார் இந்த வேடன்?

ஹிரன்தாஸ் முரளி என்ற இயற்பெயர் கொண்ட வேடன், கேரளாவின் மிகவும் பிரபலமான ராப் பாடகர்களில் ஒருவர். சாதி ஒடுக்குமுறை, சமூக அநீதி, பழங்குடியின மக்களின் வாழ்க்கை, தொழிலாளர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளை தனது பாடல்களின் மூலம் பேசி வந்தவர்.

அவரது பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு, சில நேரங்களில் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளன. சமூக கருத்துகளை நேரடியாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்தும் கலைஞராகவே அவர் பார்க்கப்படுகிறார்.

வன்னி அரசு யார்?

தமிழக அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக உள்ள வன்னி அரசு, நீண்ட காலமாக சமூக நீதி அரசியலில் செயல்பட்டு வருபவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சமூக சமத்துவம், கல்வி வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பதால், வேடன் போன்ற சமூக கருத்துகளை பேசும் கலைஞரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த சந்திப்பை பார்த்த பலர், "பாடல்களை ஆயுதமாக பயன்படுத்தும் வேடனும், சமூக நீதி குறித்து பேசும் அமைச்சரும் சந்தித்திருப்பது இயல்பான விஷயம்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர், "கலைஞர்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த சந்திப்பை பார்க்கலாம்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

எதுவாக இருந்தாலும், "பாடினதுக்காக கைது பண்ணிட்டாங்க சார்" என்று வேதனையுடன் பேசிய வேடனுக்கும், அவரை நேரில் அழைத்து பேசிய அமைச்சர் வன்னி அரசுக்கும் இடையேயான இந்த சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+