Rasathi Serial: முளைப்பாரி திருவிழாவில் ராசாத்தி உயிருக்கு ஆபத்தா?
சென்னை: பிரமாண்டத்தில் படமோ, சீரியலோ எடுப்பது என்பது விஷயம் இல்லை. அதை மக்கள் ஏத்துக்கும்படி கதையாக படம் பிடித்து தருவதில்தான் வெற்றி இருக்கிறது.
சன் டிவியின் ராசாத்தி சீரியலின் திரைக்கதை இயக்கம் இயக்குநர் ராஜ்கபூர். இவரை பாராட்டும்படி இருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியல்.
இந்த சீரியலை ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், சீரியலின் திருவிழா கொண்டாட்டம்தான் இன்னும் அதிரடியாக காண்பிக்கபட்டு வருகிறது. அதுவும் தொய்வடையாமல் போய்க்கொண்டு இருப்பது கூடுதல் பிளஸ்

ஏ ராசாத்தி
சீரியல் முழுக்க ராசாத்தி ராசாத்தி என்று ராசாத்திக்குத்தான் முக்கியத்துவம். ஸ்டார் காஸ்ட் நடிகராக நடிகர் விஜயகுமார் நடித்திருந்தும், இன்னும் அவருக்கான நடிப்பு முக்கியத்துவம் சீரியலில் காண்பிக்கப்படவில்லை. இப்போதைக்கு கொஞ்சம் ஃபிளாஷ் பேக் காட்சிகளில் வந்து போயிருக்கிறார். மற்றபடி இறந்து ஆணியில் போட்டோவாக. இருக்கிறார்.

தேர் திருவிழா
கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்துவது என்பது இவ்வளவு கஷ்டமா என்று எண்ணும் அளவுக்கு கடத்தி போகிறது. என்றாலும், கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் பணம் வசூல் செய்ய, திருவிழா நடத்துவதில் என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் ஏற்படும் என்பதை பார்வையாளர்கள் அறிவார்கள். இப்படி சண்டை குத்து என்பதெல்லாம் குடும்ப விரோதம் காரணமாக தேவர் மகன் படம் போன்று இதிலும் நடக்கிறது.

கத்திக் குத்து
ராசாத்தியின் அத்தை பையன் பாண்டியன் கபடி விளையாட்டு வீரர்.இவனுக்கு ஆபத்து என்று ராசாத்தி கனவு கண்டு பதற்றப்பட, கடைசியில் ராசாத்திக்குத்தான் அந்த ஆபத்து, அதுவும் அண்ணி சிந்தாமணியால் என்று அப்போதுதான் பாண்டியனுக்கு தெரிய வருகிறது.

ராசாத்தி முளைப்பாரி
ராசாத்தி நீ முளைப்பாரி எடுக்க போக வேண்டாம் என்று பாண்டியன் சொல்கிறான்.ஏன் என்று ராசாத்தி கேட்க, உன் உயிருக்கு ஆபத்து என்று பாண்டியன் சொல்கிறான். எனக்கு பரிவட்டம் கட்டிய இந்த மக்கள் நலனுக்காக நான் என் உயிரே போனாலும் சரி முளைப்பாரி எடுக்காமல் விடமாட்டேன்னு சொல்றா ராசாத்தி.
இப்போது அந்த ஆபத்தில் இருந்து ராசாத்தியை காப்பாற்ற வேண்டியது பாண்டியனின் கடமையாக இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications