Rasaathi Serial: ஏய்யா.. அந்த ராசாத்தி கதைதான் என்னய்யா??
சென்னை: சன் டிவியில் ராசாத்தி சீரியல் ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆயிருச்சு...இன்னும் கதை பிடிபடலைங்க. பரிவட்டம்னு சொன்னாங்க.. விஜயகுமார் கேரக்டரை காணோம். ஜமீன்னு சொன்னாங்க விசித்திரா கேரக்டரையும் காணோம்.
அக்கான்னு இன்னொரு ஜமீன் சவுந்திரவல்லியா தேவயானி வந்து இருக்காங்க.. ஆனாலும் இன்னும் கதை என்னன்னு தெரியலை. கோயில் திருவிழா, பரிவட்டம். பிறகு கல்யாணம் இதுதான் கதை போல.
இதுக்கு நடுவுல எபிசோட் ஓடிக்கிட்டே இருக்கணுமே.. அதுக்கு ராசாத்தி, மேனகா போட்டி போட்டு ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவது.. இதுதான் தொடரும் எபிஸோட்ஸ்.

ராசாத்தி மேனகா
பாண்டியன் ராசாத்தியை காதலிக்கிறான். ராசாத்தியும் பாண்டியனை காதலிக்கிறாள். இடையில் மேனகாவும் பாண்டியனை காதலிச்சதுனால வந்த வினைதான் இப்போ நடக்கும் போட்டிகள்.. சவால்கள். பாண்டியனை ஆசைப்பட்ட மேனகாவுக்கு பாண்டியன் தம்பிதான் புருஷனா கிடைக்கறான்.

ஒரே வீட்டில்
ஒரே வீட்டில் ராசாத்தியும் மேனகாவும் இருக்காங்க. பாண்டியனும் அதே வீட்டில்தான் இருக்கான். தனக்கு கிடைக்காத பாண்டியன், ராசாத்திக்கும் கிடைக்கக் கூடாது என்று சதி செய்வது மேனகாவின் வேலை. அதை முறியடிப்பது ராசாத்தியின் வேலை. சவுந்திரவல்லி குடும்ப போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படறாங்க.

ராசாத்தி போட்டோவுக்கு
போட்டோவுக்கு ராசாத்தி இருக்க கூடாது என்று நினைக்கும் மேனகா , ராசாத்தியை ரூமுக்குள் வச்சு பூட்டிட்டு, அவளை வெளியில் வர முடியாதபடி செய்து விடுகிறாள். அறைக்குள் மாட்டிக்கொண்டால் ராசாத்தி.. இப்ப அடுத்தது மேனகாவுக்கு தாலி பெருக்கிப் போடும் சடங்கு. இந்தச் சடங்கில் ராசாத்தியை கலந்துக்க விடாம செய்கிறேன் பார் என்று சபதம் போடுகிறாள் மேனகா.

என்கிட்டே சாவி
பாரு மேனகா.. உனக்கு தாலி பெருக்கிப் போடும் சடங்கு நான் இருந்தால்தான் நடக்கும். கையில பாரு சாவி வச்சு இருக்கேன். இந்த சாவியை வச்சு பீரோவைத் திறந்து செயின் எடுத்துதான் உன் தாலியை அதுல கோர்த்து போட முடியும்னு சாவியை எடுத்து நீட்டுகிறாள் ராசாத்தி. இப்படி இருவருக்குமான போட்டி மட்டும்தான் பல எபிசோட் ஓடிக்கிட்டு இருக்கு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications