இடுப்போரம் மச்சம் காட்டவா.. சிரிச்சே காலி மாமா.. ரவீனாவின் ரணகளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடுப்போரம் மச்சத்தை காட்டவா என்று கூறி கெட்ட குத்தாட்டம் போட்டுள்ளார் சின்னப் பாப்பா என்று எல்லோரும் செல்லம் கொஞ்சும் ரவீனா தாஹா.

சீரியலில் பாவாடை தாவணியில் பவ்யமாக தரிசனத்தை காட்டிய நம்ம மௌன ராகம் சக்தியா இது அடையாளம் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதுவரைக்கும் குழந்தை என நினைத்துக் கொண்டிருந்த ரவீனா தற்போது பருவ மங்கையாக அதுவும் புடைவை கட்டிக்கொண்டு இடுப்பை வெடக்கு வெடக்கு என ஆட்டி குத்தாட்டம் போட்டிருப்பது ஆத்தாடி என்று பதற வைக்கிறது.

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம்

பார்ப்பவர்களின் கண்களுக்கு பேரானந்தத்தை கொடுத்திருக்கிறார் .தற்போது டிவி சேனல்களை திறந்தாலே இந்த கொரோனா நியூஸ் போட்டு அனைவரையும் பாடாய் படுத்தி கதிகலங்கி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டிவி சேனல்களை எல்லாம் ஆப் செய்துவிட்டு இணையதளத்தில் ஏதாவது என்டர்டைன்மென்ட் இருக்கிறதா என ரசிகர்கள் இணையதளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் நேரத்தில் பார்த்ததும் மனக்கவலைகளை எல்லாம் நீக்கி விடும் வகையில் சிரித்த முகமாக இவர் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

குட்டி பாப்பா

குட்டி பாப்பா

ரவிணா முதல் முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாக்களில் தான். ஆனால் தற்போது விஜய் டிவியின் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ராட்சசன் படத்தில் பள்ளி குழந்தையாக கலக்கி இருந்தார். அந்த படத்தில் இவரை பார்த்ததற்கும் தற்போது இவரை பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் வந்துவிட்டது.

குழந்தைத்தனம் போகலியே

குழந்தைத்தனம் போகலியே

அந்தத் திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் ஆனாலும் இப்போதும் இவரது முகத்தை பார்த்தால் குழந்தை தனமாகத் தான் இருக்கிறது .ஆனால் நடிப்பு வேற லெவல் இருக்கிறது என இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர் .அதுபோல் சீரியலில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார்.

போட்டோஷூட் மோகம்

போட்டோஷூட் மோகம்

பலருக்கும் பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவருக்கும் பிடித்திருந்தாலும் இந்த அளவிற்கு இறங்கி இவர் வேலை செய்வார் என யாரும் எதிர்பார்க்காத வகையில் ரொம்பவே வைரலாக மாறிவிட்டார் .ஒரு போட்டோ ஷூட் அதுவும் கருப்பு கலர் புடவையில் இவர் நடத்திய முதல் போட்டோ ஷூட்டை காட்டுத்தீ போல பெரும் வைரலாக மாறிவிட்டது .இவருடைய போட்டோக்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து இவரை வைரல் ஆக்கி விட்டனர்.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்

ஆனால் அதையும் இவர் சந்தோஷமாக தான் என்ஜாய் பண்ணி இருக்கிறார் .இவரை பற்றி வரும் மீம்ஸ் களுக்கு தன்னுடைய பிரெண்ட்ஸ்களுடனும் ஃபேமிலியுடனும் சேர்ந்து ஜாலியாக சிரித்து என்ஜாய் பண்ணி இருக்கிறார். அதனால் நெகட்டிவ் கமெண்ட் போடும் நபர்களையும் இவர் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை .நெட்டிசன்களால் தான் நான் இந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறேன் என நெட்டிசன்களுக்கு நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்.

சக்தி

சக்தி

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் சக்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலின் கதாநாயகியாக இவர் அறிமுகமான போது இவருடைய ரசிகர்கள் ரொம்பவே குஷி ஆகி விட்டனர். மாடல் உடையில் இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருந்தவர் பாவாடை தாவணியில் படு பவ்வியமாக இந்த சீரியலில் ஜொலித்து வருகிறார் .

செம குத்து

செம குத்து

இதில் எது நிஜம் எது என தெரியாமல் இவருடைய ரசிகர்களே குழம்பி வருகின்றனர் .ஆனாலும் இந்த இரண்டுமே ரொம்பவே பிடித்திருக்கிறது என இவருக்கு கமெண்டுகளை போட்டு இருக்கின்றனர் .தற்போது இவர் மஞ்சள் கலர் புடவையில் செம குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் புடவையில் இவர்கள் இறங்கியதும் அதே பழைய ரவீனா களத்தில் குதித்து விட்டார்.

போகாத ஊரு இல்லை

போகாத ஊரு இல்லை

அதனால் இனி நன்றாக டைம் பாஸ் ஆகி விடும் என சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர் .அதிலும் சிலர் சிரித்த முகமாக மஞ்சள் உடையில் பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறது அதுவும் அந்த இடுப்போரம் மச்சம் காட்டவா என்னும் வரியை கேட்கும்போது உடம்பிற்குள் செம வைப்ரேஷன் ஆகிறது என கலாய்த்து வருகின்றனர். இதே காஸ்ட்யூமில், நான் போகாத ஊரு இல்லை என்ற இன்னொரு பாடலிலும் செமையாக குத்தியுள்ளார் ரவீனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+