தைரியமா இருங்க.. மெளனராகம் 2 வரப் போகுதாம்.. ரவீனா தாகாதான் ஹீரோயினாம்.. ஆஹா!
சென்னை: விஜய் டிவியில் தீவிரமாக ஓடி வந்து திடீரென நிறுத்தப்பட்ட மெளன ராகம் சீரியலின் 2ம் பாகத்தை ஒளிபரப்பவுள்ளனராம். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2ம் பாகத்தில் முக்கியமாக, ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமான ரவீனா தாகா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான். அந்த படத்தில் பள்ளி குழந்தையாக பார்த்த ரவீனாவை, ரசிகர்கள் இந்த சீரியலில் பருவ மங்கையாக பார்க்கப் போகிறார்கள்.
அதை விட அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன. விஜய் டிவியில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி முன்னணியில் இருந்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் தற்போது முடிவடைந்து இருந்தாலும் இந்த சீரியலின் அடுத்த பாகம் வெளியாகப் போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2வது சீசன் வந்தாச்சு
மெளனராகம் சீரியலின் ரசிகர்கள் திடீரென்று இந்த சீரியலை முடிக்கும்போது அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகம் வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவர்களுக்கு நிம்மதி பிறந்துள்ளது. இப்போது அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல சீரியல்களை பாதியிலேயே நிறுத்தி விட்டு இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த வகையில் இந்த சீரியலும் இடம்பிடித்திருக்கிறது.

சக்திதான் மெயின் ரோல்
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமே சக்தியோட கேரக்டர்தான் தான். இந்த சீரியலுக்கு சக்தி கேரக்டர் தான் முக்கியமாக அமைந்திருந்தது. முழுக்க முழுக்க இந்த கதை சத்தியை மையமாகக் கொண்டு சுற்றி சுற்றி வந்தாலும் பாடலையும் பாட்டு திறமையும் இயல்பாக இருக்கும் ஒரு பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் உள்ள பாசப் போராட்டத்தில் கதையாகவே இருந்தது. சக்தியின் தந்தை ஒரு பாடலாசிரியர் மட்டுமல்லாமல் அவரது தாயும் ஒரு நன்றாகப் பாடும் பெண் தான்.

சக்தியைச் சுற்றியே கதை
இவர்கள் இருவரும் காதலித்து சக்தி வயிற்றில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையில் சக்தியின் அப்பாவை காதலித்து அவர்களின் பெற்றோரின் வற்புறுத்தலால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காயத்ரி மற்றும் அவரது மகளை சுற்றியே இந்த கதை இருக்கிறது. கதை என்னவோ பெரியதாக இருந்தாலும் முழு கவனமும் சக்தி கேரக்டர் மீதுதான் ரசிகர்களுக்கு இருக்கின்றது. அந்த அளவிற்கு ஒரு வலுவான கேரக்டரில் இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் ரவீனா நடிக்கப்போகிறார்.

செல்லக் குட்டி சேட்டைக்காரி
மெளனராகம் 2 சீரியல் ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டு வருகிறது .அதில் ரவீனாவின் கலக்கலான அறிமுகத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ரவீனா ஏற்கனவே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் கடைக்குட்டி தங்கச்சியாக வீட்டின் செல்லப் பெண்ணாக ரொம்பவே துடிப்பான சேட்டைக்காரியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜில்லாவில் வருவாரே அதே பாப்பா!
ரவீனா சீரியல்களில் மட்டுமல்லாமல் முதன்முதலில் விஜய் நடித்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த படத்தில் ஒரு போலீஸாக விஜய் நடித்து இருப்பார். அதில் ஒரு சிலிண்டர் வெடிப்பில் மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழும் அதை விஜய் போய் தூக்குவார். அந்த குழந்தை தான் ரவீனா. முதல் படத்திலேயே விஜயுடன் நடித்த அனுபவம் இருப்பதால் அதை பெருமையாக சொல்வார் ரவீனா. ஜில்லா படத்தில் நடிக்கும்போது இவர் நான்காம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தாராம்.

ராட்சசனிலும் கலக்கல்
ஜில்லா படத்தில் ரவீனாவுடைய கேரக்டரும் நடிப்பையும் பார்த்து தான் இவருக்கு விஷ்ணு விஷால் உடன் நடிக்கும் ராட்சசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ராட்சசன் படத்திலும் குழந்தையாக தான் நடித்திருக்கிறார் ஆனாலும் இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகளை மையமாகக்கொண்ட ராட்சசன் படத்தில் இவரின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது.

கலக்கப் போவது யாரு
ராட்சசன் படத்தைத் தொடர்ந்து சினிமாக்களில் பெரிய வரவேற்பு எதுவும் இல்லாமல் இருந்ததால் சீரியல்களில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததும் சீரியலில் நடிப்பதற்கு சம்மதித்து விட்டார். தற்போது இவர் மெளன ராகம் 2ம் பாக சீரியலில் கதாநாயகியாக நடிப்பதால் இவருக்கு மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கப் போகிறது. இவரது இன்ஸ்டாகிராம் டுவிட்டர் பேஸ்புக்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களும் புது சீரியலில் ஹீரோயினாக நடிக்கப் போவதற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications