Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா! இனி புதிய ஹீரோயின் இந்த வில்லி நடிகையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருந்த "சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்" என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருந்த ரவீனா தாஹா அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதில் யார் நடிக்கிறார் என்று பார்க்கலாம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கும் நிலையில் அதற்கு பிறகு நான்கு சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி இருந்தன. அதில் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஏட்டிக்கு போட்டியான ஜோடிகள் வாழ்க்கையில் இணைந்தால் என்ன மாதிரி இருக்கும் என்பது இந்த சீரியலின் கதைக்களமாக இருந்தது.

television vijay tv raveena daha

படித்து பெரிய லெவலில் வரவேண்டும் என்ற கனவோடு இருக்கும் கதாநாயகி முரட்டுத்தனமாக இருக்கும் கதாநாயகனோடு கல்யாணம் நடந்தால் என்ன நடக்கப்போகிறது என்று இந்த சீரியலின் கதை இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதோடு இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரவீனா தாஹா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிந்து பைரவி சீரியலில் விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, வீட்டுக்கு வீடு வாசல் படி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான திரவியம் ராஜ்குமார் ஒரு ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பவித்ரா பி நாயக் நடிக்கிறார்.

television vijay tv raveena daha

அதுபோல மற்றொரு ஹீரோவாக விஜய் டிவியில் போன வருடத்தில் முடிவுக்கு வந்த செல்லம்மா சீரியலில் செல்லம்மாவின் கணவராக நடித்த வில்லன் நடிகர் ஆனந்த கிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். ஆனந்த கிருஷ்ணன் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

சிந்து பைரவி சீரியல் மூலமாக அவர் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். இவருக்கு ஜோடியாக தான் ரவீனா நடிக்க இருந்தது ஆனால் இப்போது அவர் வெளியேறி இருப்பதால் அவருக்கு பதிலாக ஆர்த்தி சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். ரவீனா குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து கதாநாயகியாக மௌன ராகம் 2 சீரியல் நடித்து இருந்தார்.

television vijay tv raveena daha

அடுத்ததாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடி இருந்தார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதற்கு பிறகு சீரியலில் நடிப்பதற்காக களம் இறங்கி இருந்தார்.

television vijay tv raveena daha

இப்போது அவர் கமிட்டான சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். ஆனாலும் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற எந்த காரணத்தையும் ரவீனா இன்னும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+