கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு பண்ணிட்டோம்.. லீக்கான நிறை மாத நிலவே "ரவி” பேசிய ஆடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா பற்றி அவரோடு நடித்த நடிகர் ரவி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

சம்யுக்தா ஏற்கனவே ரவி என்னிடம் மிஸ் பிஹேவ் பண்ணி இருந்தார் என்று கூறியிருந்தார்.

ஆனால் சம்யுக்தாவும் நானும் ஏற்கனவே பிசிகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என்று ஆடியோ ஒன்றில் ரவி பேசி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பிரச்சனையில் யார் மீது சரி யார் மீது தவறு என்று புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்று ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி இரண்டு மாதங்களுக்குள் கருத்து வேறுபாடல் பிரிந்து இருக்கும் நிலையில், இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பாஸ்ட் லைஃப் பற்றி சில ஆடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு ஆடியோ வெளியாகி இருந்தது.

அதில் சம்யுக்தா, விஷ்ணுகாந்தை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியலில் நடித்த ரவியையும் காதலித்துக் கொண்டு இருந்ததாக அந்த ஆடியோவில் பேசியிருந்தார். அதோடு அந்த ஆடியோவில் ரவி தன்னிடம் மிஸ் பிஹேவ் பண்ணி இருந்தார் என்றும் பேசி இருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியான பிறகு ரவி இதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். என்னோடு பலர் பழகி இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் நான் எப்படிப்பட்டவன் என்று, நான் மிஸ் பிஹேவ் பண்ணுனேனா? அதுக்கு அர்த்தம் தெரியுமா? என்று சம்யுக்தாவிடம் கேள்வியும் எழுப்பி இருந்தார்.

 Ravi has said that Samyuktha and I were already in a physical relationship

இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் நிறைமாத சீரியல் இயக்குனர் ஹரிஷோடு நடிகர் ரவி பேசி இருக்கிறார். அப்போது ஹரிஷ் ரவியிடம் உண்மையா சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது என்று கேட்க, உண்மைய சொல்லணும்னா எனக்கும் சம்யுக்தாவிற்கும் மேட்டர் முடிஞ்சிட்டு. சம்யுக்தா பிறந்த நாளில் நாங்க தப்பு பண்ணிட்டோம்.

அது அவங்க அம்மாவுக்கும் தெரியும். அதனால அவங்க அம்மா எங்களை பேச கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க என்று அந்த ஆடியோவில் ரவி பேசியிருக்கிறார். தற்போது இந்த ஆடியோ வெளியான நிலையில், இதுவரைக்கும் சம்யுக்தா சொன்ன குற்றசாட்டுகளை எல்லாம் வைத்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சம்யுக்தா நேற்று வரைக்கும் கொடுத்த பேட்டிகளில் நான் கல்யாணம் முடியற வரைக்கும் வெர்ஜின் ஆகத்தான் இருந்தேன். அதை என்னால் நிரூபிக்க முடியும். கல்யாணத்துக்கு முன்னாடி கூட விஷ்ணுகாந்தோடு நான் பிசிகல் ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து விஷ்ணுகாந்த் தனக்குத் திருமணத்திற்கு முன்பே எல்லாம் நடந்து விட்டது என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரவியும் அதே வார்த்தையை கூறி இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் சம்யுக்தா மீது அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+