விஜய் திரிஷாவை விடுங்க.. மாலையும் கழுத்துமாக வந்து நின்ற ரவி மோகன்- கெனிஷா! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்துவரும் ரவி மோகன் குடும்ப விஷயம் சில மாதங்களுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையும் பேசப்படுகிறது. இதனால் பலர் ரவிமோகனை தான் விஜய் பின்பற்றுகிறாரா என்று சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் அவருடைய தோழியான பாடகி கெனிஷா இருவரும் மாலையும் கழுத்தமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது.

ரவி மோகன் புது அவதாரம்
அது வேறொன்றுமில்லை, நடிகர் ரவி மோகன் இப்போது புதிய பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் அவர் அறிமுகமாகும் படம் தான் அன் ஆர்டினரி மேன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
இந்த படம் ரவி மோகன் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகிறது. நடிகராக இருந்தவர் திடீரென இயக்குநராக மாறுவது ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பிரபல நடிகர் யோகி பாபு என்பதும் கூடுதல் கவனத்தை பெற்றது.
படத்தின் பூஜை
இந்த நிலையில் படத்தின் பூஜை நிகழ்ச்சி சென்னையில் எளிமையாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ரவி மோகனும், தயாரிப்பாளரான கெனிஷாவும் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து படத்தை தொடங்கி வைத்தனர். இருவரும் மாலை அணிந்து ஒன்றாக நின்ற அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதை பார்த்த பலரும் "விஜய் - த்ரிஷா விவகாரம் பேசிக்கொண்டிருக்கும்போது, இங்கே ரவி மோகன் - கெனிஷா ஜோடியே டிரெண்டாகி விட்டார்கள்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரவி மோகன் குடும்ப வாழ்க்கை
ஏற்கனவே ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை சில மாதங்களாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதோடு ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்ட பதிவில், ரவிமோகன் தங்களை பிரிவதற்கு காரணம் புதியதாக வந்த ஒரு நபர் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த நேரத்தில் கெனிஷா தான் அந்த நபர் என்று பல செய்திகளும் பரவியது. இந்த நிலையில், ரவி மோகனும் கெனிஷாவும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
அதற்கும் மேலாக, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் கூட ரவி மோகன் கெனிஷா பற்றி மிகவும் எமோஷனலாக பேசினார். அதேபோல் கெனிஷாவும் ரவி மோகனை பற்றி பாராட்டி பேசினார். இதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவியது.

இப்போது அந்த நிறுவனத்தின் முதல் படமாக அன் ஆர்டினரி மேன் உருவாக தொடங்கியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். வழக்கமாக காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துவரும் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் இயக்குவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்திற்கு ஹைட்ரோ இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விவன் ஆம்ப்ரோஸ் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சிவா அமைக்கிறார்.

படத்தின் கதை
படத்தின் கதையும் சாதாரணமாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அசாதாரணமான மனவலிமையை பற்றி பேசும் கதையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், ரவி மோகனின் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களும் இந்த படத்தின் கதையில் இடம் பெற்றிருக்கலாம் என்ற பேச்சும் சினிமா வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.
எது உண்மை, படம் எப்படி இருக்கும் என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும். ஆனால் ஒரு நடிகர் இயக்குநராக மாறி தனது முதல் படத்தை தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதோடு, மாலையும் கழுத்துமாக ஒன்றாக நின்ற ரவி மோகன் - கெனிஷா புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு, இருவருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications