Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ravi Mohan: "கடவுள் தந்த கிப்ட் இவங்க” சொத்து முடக்கம்! ரவி மோகன் பேச பேச கண்கலங்கிய கெனிஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகன், தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'-ஐ சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் தொடங்கி வைத்தார். தனிப்பட்ட வாழ்வில் சில சர்ச்சைகளையும், பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரவி மோகன் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த விழாவில், அவரது நெருங்கிய தோழியும் பாடகியுமான கெனிஷா, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா எனப் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Ravi Mohan Aarthi Kenisha

கெனிஷா தான் என் சொத்து

மேடையில் பேசிய ரவி மோகன், தான் சந்தித்த சவால்கள் குறித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். "எனக்கும் சில நெகட்டிவிட்டி வந்தது. என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள்தான். காசு, பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பைச் சம்பாதிப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன்." என்று உருக்கமாகப் பேசினார்.

இந்த விழா நடப்பதற்கு முழு காரணம் கெனிஷா தான் என்று கூறிய ரவி மோகன், "ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர் அவர்தான். அவங்களை மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றார். ரவி மோகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கெனிஷாவும் கண்கலங்கிப் போனார்.

முதல் படம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

தற்போது 'ஜீனி', 'கராத்தே பாபு', 'பராசக்தி' போன்ற படங்களில் நடித்து வரும் ரவி மோகன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக, 'டிக்கிலோனா' மற்றும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோ கோட்' (BRO CODE) என்ற படத்தை அறிவித்தார். இந்தப் படத்தில் அவரே நடித்து, எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் அவதாரம்

விழாவில் ஒரு சர்ப்ரைஸாக, ரவி மோகன் தானே ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்தப் படத்திற்கு 'அன் ஆர்டினரி மேன்' (An Ordinary Man) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரே தயாரித்து, நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்கவுள்ளார். இது அவரது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படமாகும்.

Ravi Mohan Aarthi Kenisha

தொலைநோக்குத் திட்டங்கள்

ரவி மோகன் ஸ்டுடியோஸ், இந்தாண்டு ஒரு படம், அடுத்த ஆண்டு மூன்று படங்கள், அதற்கடுத்த ஆண்டு நான்கு படங்கள் என புதிய திரைப்படங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஓடிடி தளங்களுக்காக, ஃபிக்சன் மற்றும் நான்-ஃபிக்சன் என இரண்டு பிரிவுகளிலும் 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் பல ப்ராஜெக்ட்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

உதவி மற்றும் ஊக்குவிப்பு:

வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025 முதல் 2027 வரை 10 புதிய கலைஞர்களின் ப்ராஜெக்ட்களை வெளியிடவும், நல்ல படங்களுக்குத் தயாரிப்பு ரீதியாக உதவவும் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' முன்வந்துள்ளது. ரவி மோகனின் இந்த பிரம்மாண்டமான திட்டங்கள், அவரது வெற்றிக்கான உறுதியான நோக்கத்தைக் காட்டுவதுடன், தமிழ் திரையுலகில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தின் எழுச்சியையும் உணர்த்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+