Ravi Mohan: அடுத்தடுத்து பிரச்சனை! மகன் நிலைமையை பார்த்து கண் கலங்கிய ரவி மோகன் அம்மா! மோகன் ராஜா உருக்கம்
சென்னை: நடிகர் ரவி மோகன், தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'-ஐத் தொடங்கி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த நிறுவனத்தின் அறிமுக விழா, திரையுலகப் பிரபலங்களின் வருகையாலும், குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான பேச்சுகளாலும் உணர்வுபூர்வமாக அமைந்தது.

தாய், அண்ணனின் நெகிழ்ச்சி
விழாவில், ரவி மோகனின் தாயார் வரலட்சுமி மற்றும் அண்ணன் மோகன் ராஜா ஆகியோர் மேடையேறினர். அப்போது, ரவி மோகன் தனது தாயாருக்கு ஒரு சிறப்புப் பரிசை வழங்கினார். அதில், தாயின் மடியில் அவர் படுத்திருப்பது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது.
தாய் வரலட்சுமியின் உருக்கம்:
பரிசைப் பெற்றுக்கொண்ட பின்னர், பேசிய அவரது தாயார் வரலட்சுமி, "அவன் சின்ன வயசுல கீழ விழுந்திடக் கூடாதுன்னு அவன் பின்னாடியே போவேன்..." என்று கூறி, உணர்ச்சி மேலிட உடைந்து அழுதார். இந்த வார்த்தைகளைக் கேட்ட மேடையில் இருந்த அத்தனை பேரும் கண்கலங்கினர்.
அண்ணன் மோகன் ராஜாவின் பெருமிதம்
தொடர்ந்து பேசிய அண்ணன் மோகன் ராஜா, "ரவிக்கு 11 வயசு இருக்கும்போது, அவன் 5 மணி நேரம் அரங்கேற்றம் நடத்தினான். அப்போது அவனை நான் அண்ணாந்து பார்த்தேன். இப்போதும் அதே பிரமிப்போடு அவனை அண்ணாந்து பார்க்கிறேன். இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு, படப்பிடிப்பில் நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்வான். அவன் ஒரு இயக்குனரின் நடிகர்." என்று பெருமிதத்துடன் பேசினார். ரவி மோகன் அடைந்துள்ள வளர்ச்சி குறித்துப் பேசிய மோகன் ராஜா, "இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கும். அது, ரவி நல்லா இருக்கணும் என்பதுதான். இவ்வளவு நல்ல உள்ளங்களை அவன் சம்பாதித்து வைத்திருக்கிறான்" என்று கூறி, கண்கலங்கினார்.
இரண்டு புதிய படங்களின் அறிவிப்பு
விழாவில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களின் பூஜைகள் நடைபெற்றன.
1. 'ப்ரோ கோட்': கார்த்திக் யோகி இயக்கத்தில், ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவிருக்கும் படம். 2. 'An Ordinary Man': யோகிகன் தனது தாயார் வரலட்சுமி, அண்ணன் மோகன் ராஜா மற்றும் கெனிஷா ஆகியோருடன் பங்கே பாபு ஹீரோவாக நடிக்க, ரவி மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம். இந்த விழாவில், ரவி மோகன், கெனிஷா ஒரே நிற உடையில் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னட நடிகர் சிவராஜ் குமார் வந்திருந்தார். விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், ரவி மோகனும் கெனிஷாவும் ஒரே நிற உடையில் வந்தனர். கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, ஸ்ரதா ஸ்ரீநாத், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது தாய், அண்ணன் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன், ரவி மோகன் தனது புதிய பயணத்தைத் தொடங்கியிருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன் உருக்கம்
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய ரவி மோகன், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். "இங்குதான் நான் இருப்பேன். என்னை வாழ்த்த வேண்டும் என்று வந்திருப்பவர்கள் வாழ்த்துங்கள். சிலர் வாழ்த்த வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்குதான் நான் இருப்பேன். என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும், என் மீது அக்கறை கொண்ட நிஜ வந்தியத்தேவன் கார்த்தி" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். அவரது இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications