42 லட்சம் சொத்து.. உண்மையை மறைத்து கோவாவில் ரவி மோகன் செய்த செயல்.. புது சிக்கல்! பின்னணி சம்பவம்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரவி மோகன் (ஜெயம் ரவி), சமீப காலமாக படங்களைவிட தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக அவரது குடும்ப பிரச்சனைகள், விவாகரத்து விவகாரம் ஆகியவை தொடர்ந்து தலைப்புச் செய்தியாகி வரும் நிலையில், இப்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

விவாகரத்து இன்னும் முடியவில்லை
ரவி மோகன்கடந்த ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தது பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முக்கியமாக, இதற்கு ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி சம்மதம் அளிக்கவில்லை என்பதும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ரவி மோகனும் அவரது தோழி கெனிஷாவும் கோவாவில் சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு சொத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்னவென்றால் - அந்த சொத்து பதிவு செய்யும்போது "திருமணம் ஆகவில்லை" என்று ரவி மோகன் குறிப்பிட்டதாக கூறப்படுவது தான்.
இது சட்ட ரீதியாக சரியா?
திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இப்படியான தகவல் வெளியாகியுள்ளதால், இது சட்ட ரீதியாக சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் கூட, "விவாகரத்து ஆகாமலே இப்படிச் சொல்லலாமா?" என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.
கெனிஷாவுடன் நெருக்கம்
இந்த சர்ச்சையில் மேலும் பேசப்படும் பெயர் கெனிஷா தான். சமீப காலமாகவே ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெளிநாட்டு ட்ரிப் முதல் பார்ட்டி புகைப்படங்கள் வரை இருவரும் சேர்ந்து பகிர்ந்து வருவது, இவர்களின் நட்பைச் சுற்றி பல வதந்திகளை உருவாக்கியுள்ளது.
ஆர்த்தி ரவியின் சோக பதிவுகள்
இதே நேரத்தில், ஆர்த்தி ரவி தனது சமூக வலைதளங்களில் சோகமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் நேரடியாக எதையும் கூறவில்லை என்றாலும், அந்த பதிவுகள் அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாக பலர் கருதுகின்றனர்.
பழைய சர்ச்சைகள்
சில மாதங்களுக்கு முன்பு விஜய் மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சை கிளம்பியபோது, கெனிஷா குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது கெனிஷாவிற்க்கு ஆதரவாக ரவி மோகன் வெளியான ஒரு வீடியோ கூட பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
யார் இந்த ரவி மோகன்?
தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், ஆக்ஷன் என பல்வேறு வகை படங்களில் நடித்தவர். சினிமாவுக்கு வெளியே, குடும்பத்தோடு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர் என்ற இமேஜ் இருந்த நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
ஒருபுறம் விவாகரத்து வழக்கு, மறுபுறம் புதிய சொத்து சர்ச்சை, இதற்கிடையில் நட்பு தொடர்பான வதந்திகள் - இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ரவி மோகன் குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இப்போது அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்று தான்.. இந்த விவகாரங்களுக்கு அவர் நேரடியாக விளக்கம் தருவாரா? அல்லது அமைதியாகவே கடந்து செல்வாரா? என்பது தான். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications