அச்சச்சோ பஞ்சுக்கு பதிலா பட்டர் பிஸ்கட் மாட்டிக்கிட்டானே..
சென்னை:சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் அதிக வன்முறையை காமிக்காம, குடும்ப சந்தோஷங்களையும் காமிக்கறது ரொம்ப நல்லாத்தான் இருக்கு.
ஆனா, தேஜாவும், உமாவும் சேர்ந்து செய்யும் சதி வேலை ரொம்ப கொடுமை. ஜுரம் வரவைக்க மாத்திரை கொடுக்கறது.. அதுவும் இதை ஒரு பெண் டாக்டர் செய்யறது.. கஷ்டமாத்தான் இருக்கு..

ரவிதான் பட்டர் பிஸ்கட், பாக்கியலட்சுமிதான் பஞ்சு மிட்டாய். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படித்தான் கூப்பிட்டுக்கறாங்க. ரெண்டாவது அண்ணி டாக்டர் உமாகிட்ட, பாக்கிய லட்சுமிக்கு நல்லா ஜுரம் வந்து 10 நாள் படுக்கையில கிடக்கற மாதிரி மாத்திரை குடுத்துடுன்னு தேஜா சொல்றா.

உமாவும் மாத்திரையை நுணுக்கி ஜூஸில் குடுக்க, கிளாஸ் மாறி ரவி அதை குடிச்சுடறான். இதை உமா பார்க்கலை. இந்த சமயத்துலதான் கோயிலுக்கு போன பாக்கியலட்சுமியும், ரவியும் அங்க எலுமிச்சம் பழம் விளக்கு ஏத்தி நேர்த்தி கடன் செய்யறாங்க.
அங்கபிரதட்சணம் செய்ய பாக்கியலட்சுமி குளத்துல மூழ்கி எழுந்து, அங்கபிரதட்சணம் செய்யறா. பார்த்தா கழுத்துல போட்டிருந்த செயினை காணோம். கோயில்ல தேடினாலும் கிடைக்கலை.

அது மகாலட்சுமி காசு குடுத்து, ரவி வாங்கிக் குடுத்த செயின். மகாக்கா நினைவா உயிர் மாதிரி நினைச்சு பார்த்திரமா போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு பாக்கிய லட்சுமி அழறா.

குளத்துல விழுந்திருக்கும் பஞ்சு அழாதே நான் எடுத்து தரேன்னு..மூழ்கி மூழ்கி தேடி எடுத்து தர்றான். பாக்கியலட்சுமி சந்தோஷமாகிடறா.இதை எல்லாம் பார்த்த தேஜா, உமாகிட்ட போட்டு குடுத்துடறா.
மாத்திரை கலந்த ஜூஸை குடிச்சு மயங்கி பயங்கர ஜுரத்துல கண் முழிக்காம இருக்கான் ரவி. எல்லாம் இவளாலதான், குளத்துல முங்கி இவ செயினை ரவி எடுத்து குடுத்தான், அதனாலதான் ரவிக்கு ஜுரம் வந்துருச்சுன்னு உமா சொல்றாங்க.
உமா,தேஜா குட்டு அடுத்து உடைய போவுது.. பிரமோவுல பார்த்தேங்க...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications