"மிஸஸ் ரவி" என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ.. குலதெய்வம் கோயிலில் மகாலட்சுமிக்காக உருகிய ரவீந்தர்
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், அவரது மனைவி மகாலட்சுமியுடன் திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தி போட்டோவை பதிவிட்டுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி திடீரென சமூகவலைதளங்கள், செய்தித்தாள்கள், ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் என பார்த்த இடங்களில் எல்லாம் அசை போட்டது என்றால் அது ரவீந்தர்- மகாலட்சுமியின் திருமணம்தான்.
அண்மையில் விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு பிறகு இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது என்ன காரணம் தெரியுமா.

வனிதா விஜயகுமார்
த.யாரிப்பாளர் ரவீந்தர், நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணத்தை எதிர்த்தார். அதாவது பீட்டர் பால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என விமர்சித்தார். அது போல் மகாலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம். அதிலும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் மகாலட்சுமியும் பிரபலமடைந்தார்.

ஒன்றரை ஆண்டுகள்
இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததே யாருக்கும் தெரியாத நிலையில் திடீரென திருமணம் நடந்ததால் இத்தனை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏதோ பட புரோமோஷனுக்காக என பலர் நினைத்தனர். ஆனால் பிறகுதான் தெரிந்தது அது உண்மை என! மேலும் இரு மனங்களும் ஒத்து போன பிறகு கருப்பு- வெள்ளை, ஏழை பணக்காரன், தடிமன்- ஒல்லி, நெட்டை குட்டை இப்படியான வேறுபாடுகளை பார்ப்பது தேவையற்றது என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை.

திருமணம் பிரபலம்
இப்படிதான் இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் ரவீந்தரும் மகாலட்சுமியும் சேர்ந்து விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர், இருவரும் தேனிலவுக்கு தனி விமானத்தில் போவதாக போட்டுவிடாதீங்க. நாங்கள் குலதெய்வம் கோயிலுக்குத்தான் போகிறோம் என பதிவு போட்டிருந்தார்.

மகாலட்சுமியுடன் புகைப்படம்
நெட்டிசன்களும் யூடியூப்களும் விடுவார்களா, அவர் எதை போட வேண்டாம் என சொன்னாரோ அதையே தம்ப்நெயிலாக்கிவிட்டனர். இந்த நிலையில் குலதெய்வம் கோயில் வாசலில் நின்று கொண்டு ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். அதில் அவர் சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.
குலம் செழிக்க வந்தவள் நீ
அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ
இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு
நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி
நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி
ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம்
என்றும் உங்கள்
ரவி & மிஸஸ் ரவி
என அந்த பதிவில் போட்டுள்ளார். இதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications