பிரியா ராமன் என்னை பற்றி அந்த வார்த்தை சொல்லலாமா? நான் என் பொண்டாட்டி கிட்ட சொல்லவா? ரவீந்தர் கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வெளியே வந்த ரவீந்தர் நடிகை பிரியா ராமன் தன்னைப் பற்றி பேட்டிகளில் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று தன்னுடைய கோபத்தை வெளிகாட்டி இருக்கிறார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அந்த நிகழ்ச்சி பற்றியும் தன்னைப் பற்றி விமர்சனங்களுக்கும் பதில் கொடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் நடிகர் ரஞ்சித்தின் மனைவியான நடிகை பிரியா ராமன் தன்னை பற்றி பேட்டிகளில் பேசியது குறித்து அதற்கு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதாவது ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது சில இடங்களில் ரஞ்சித்தை நோஸ்கட் செய்வது போலவே பேசி இருந்தார். அது போதாது என்று வெளியே வரும்போது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பற்றி ரிவ்யூ சொல்லி இருந்தார். அப்போது கூட ரஞ்சித்தை பார்த்து நீங்க சாமி, கண்ணுன்னு வேஷம் போட்டுட்டு இருக்க முடியாது உங்களுடைய நிஜ கேரக்டரில் விளையாடுங்கள் என்று பேசிவிட்டு வந்திருந்தார்.
இது குறித்து ரஞ்சித்தின் மனைவியான பிரியா ராமன் ரவீந்தரின் செயல்பாடுகள் தப்பாக இருக்கிறது என்று பேட்டிகளில் பேசி இருந்தார். அதாவது ரவீந்தர் அடுத்தவர்களை பற்றி எதுவுமே தெரியாமல் இவர்கள் இப்படித்தான் என்று ஒரு முத்திரையை குத்துகிறார். அவர் சொல்வது போல ரஞ்சித் பிக் பாஸ் வீட்டுக்குள் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. அவர் வெளியே எப்படி இருக்கிறாரோ அதுபோலத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்தரை நம்பி ரஞ்சித் இருக்கவில்லை. ரவீந்தர் தான் ரொம்பவும் ஆபத்தானவர் என்று பல விஷயங்களை பேசி இருந்தார். இதற்கு ரவீந்தர் பேசுகையில் ரஞ்சித்தின் மனைவி என்னை பற்றி பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார் என்றால் அவர்தான் விளையாட வேண்டும்.
வெளியே அவருக்கு பிஆர் வேலையை இந்த அம்மா செஞ்சுட்டு இருக்காங்க. நான் என் மனைவியிடம் சொன்னால் அவளும் என்னை பற்றி ஆகா ஓகோ என்று மைக்கை பிடித்து பேசுவார். ஆனால் நான் எந்த இடத்திலும் என்னுடைய மனைவி பேச வேண்டும் என்று சொன்னதே கிடையாது. இவங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும்? நான் விளையாட்டை விளையாடுங்க என்று சொன்னேன் அவ்வளவுதான்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரஞ்சித் எப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு தெரியும். நான் பார்த்துவிட்டு தானே வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications