விஜய் சேதுபதி பேசிய பிறகு பிரேக்கில் இதுதான் நடக்கும்! பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த ரவீந்தர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பிறகு பிரேக்கிங் டைமில் என்ன நடக்கும் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 சீசன்களாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இரண்டாவது சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் அவர் தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் எல்லோரையும் விடவும் அனுபவத்திலும் பிக் பாஸ் பற்றிய புரிதலிலும் அதிகம் உள்ள நபராக ரவீந்தர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

ஆனால் அவர் முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டது யாரும் எதிர்பார்க்காத சம்பவம்தான். காரணம் அவரால் பிசிகல் பிஸிக்கில் விளையாட முடியாததால் அவர் வெளியேற்றப்பட்டதாக கூட வதந்திகள் பரவி வருகிறது. பெரிய லெவெலில் பிசிகல் டாஸ்க் செய்ய முடியவில்லை என்றாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களை குழப்பி தனக்கு சாதகமாக எல்லா போட்டியாளர்களும் முடிவு எடுக்கும் வகையில் தான் பல நேரங்களில் ரவீந்தர் கச்சிதமாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்.
ஆனாலும் கடைசியில் அது எடுபடாமல் போய்விட்டது. பிறகு வெளியே வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை ரவீந்தர் பேசி இருக்கிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்கனவே எனக்கு இரண்டு முறை வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. கடந்த சீசனில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்று இருந்தது. ஆனால் சில காரணங்களால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
அதனால் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்குறியோடு தான் இருந்தேன். அதற்காகத்தான் எனக்கு வனிதா உதவி செஞ்சாங்க. அவங்க ரெக்கமண்ட் பண்ணுனதால எனக்கு இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தான் கன்ஃபார்ம் ஆனது. ஆனால் நான்தான் முதல் ஆளாக உள்ளே போவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று என்னுடைய மனைவி எவ்வளவோ சொன்னாங்க. ஆனால் நான் தான் கேட்காமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று அடம்பிடித்தேன். அப்போ கூட நீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டா தான் என்னுடைய அருமை உங்களுக்கு தெரியும் என்று சொல்லி தான் அனுப்புனாங்க.
ஒரு வாரம் கூட என்னால் அந்த வீட்டிற்குள் இருக்க முடியாமல் வெளியே வந்தாச்சு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல விஷயங்கள் வெளியே காட்டப்படுவதில்லை. என்னை அந்த வீட்டிற்குள் பல இடங்களில் குண்டன், இவனுக்கு சாப்பாடு போட முடியாது, இவனால் நமக்கு சாப்பாடு இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் பலர் பேசினார்கள்.
என்னை பற்றி ஆண்களும், பெண்களும் அந்த வீட்டிற்குள் உருவ கேலி செஞ்சிருக்காங்க? அதுபோல முதல் நாள் விஜய் சேதுபதி எங்கள் முன்பு பேசும்போது எல்லோருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. அதற்கு முன்பு நாம் இப்படி பேசலாம் அப்படி பேசலாம் என்று பல விஷயங்களை நாங்கள் யோசித்து வைத்திருந்தோம்.
இதுவரைக்கும் ஏழு சீசன்களில் பிக் பாஸ் தொகுப்பாளர் இந்த மாதிரி பேசியது கிடையாது. முதல் நாளே அவர் பேசியது எங்களுக்கு குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறகு அடுத்த வாரம் சுனிதா கவிதை சொல்லப் போறேன் என்று சொன்னார். அருண் நான் விஜய் சேதுபதி போலவே பேச போறேன் என்று சொல்லியிருந்தார்.
இப்படி எல்லோரும் ஒரு பிளான் வெச்சிருக்கும் போது விஜய் சேதுபதி எல்லாரையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டதும் எல்லாருக்கும் அல்லு விட்டுட்டு. பிறகு விஜய் சேதுபதி பிரேக் விட்டுட்டு போன போது நாங்கள் எல்லோரும் அதிர்ச்சியில் தான் இருந்தோம். என்ன செய்ய என்று யோசித்து எதுவும் பேசக்கூடாது என்ற ஒரு மனநிலைக்கு வந்து விட்டோம்.

பிக் பாஸ்க்குள் அழுத காரணம் இதுதான்! விஜய் சேதுபதியை விட கமல் தான் பெஸ்ட்! ரவீந்தர் பளிச்
நாம என்ன பேசினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ அதை நம்முடைய வாயிலிருந்து வர வைக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. ஆனால் விஜய் சேதுபதி ரொம்ப ஹார்டா போட்டியாளர்களிடம் பேசுகிறார் என்று எல்லோருக்கும் தெரிகிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு வார இறுதி நாளில் விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்துதான் நாம சரியாக விளையாடிருக்கோமா? இல்லையா? என்று தெரியவரும். அருணிடம் விஜய் சேதுபதி சொம்பு தூக்கி பட்டத்தை நீங்களே வச்சுக்கோங்க என்று சொன்னார் இது அவரை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு என்று பலர் சொல்கிறார்கள்.
ஆனால் அருண் இன்னும் அந்த குறிப்பிட்ட வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை என்று விஜய் சேதுபதி சொல்லாமல் சொல்கிறார் என்று தான் அர்த்தம். இது உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு புரியும். அதனால் அடுத்த வாரம் அவர்களுடைய விளையாட்டை மாற்றி விடுவார்கள் அதற்காகத்தான் விஜய் சேதுபதி அப்படி பேசுகிறார் என ரவீந்தர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications