பிக் பாஸ்க்குள் அழுத காரணம் இதுதான்! விஜய் சேதுபதியை விட கமல் தான் பெஸ்ட்! ரவீந்தர் பளிச்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியே வந்த ரவீந்தர் அந்த நிகழ்ச்சி பற்றியும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனைத் தவிர இரண்டாவது சீசனிலிருந்து ஆறாவது சீசன் வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீந்தர் ரிவ்யூ செய்து கொண்டிருந்தார். youtube சேனல்களில் இவர் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

அதனாலேயே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரிவியூவராக தான் பலருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8வது சீசனில் போட்டியாளராக ரவீந்தர் இருக்கிறார் என்று உத்தேச பட்டியலில் அவர் பெயர் வந்ததும் நிகழ்ச்சி பற்றி எதிர்பார்ப்பு இருந்தது.
காரணம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்தவராட்சே இவர்தான் இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருப்பார் என்று கூறி வந்தனர். ஆனால் முதல் ஆளாக நிகழ்ச்சிக்குள் அடி எடுத்து வைத்த ரவீந்தர் முதல் நாளாக எலிமினேஷன் செய்யப்பட்டார். அது குறித்து வெளியே வந்த பிறகும் பல சேனல்களில் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் பேசுகையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து ஒரு வாரத்திற்குள் வெளியேற்றப்பட்டு விட்டேன் என்ற சிலர் என்னை ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கண்டுகொள்ள போவது கிடையாது. என்னை பற்றி எவ்வளவோ உருவ கேலிகள் இதுவரைக்கும் செய்திருக்கிறார்கள். அதற்கே நான் கவலைப்பட்டது கிடையாது.
காரணம் நான் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லும் உருவகேலி தான் எனக்கு பிளஸ் ஆக இருப்பதாக நினைக்கிறேன். இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று வசனத்தை வைப்பார்கள். அதற்கு முழுமையாக செட்டான ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் பல போட்டியாளர்கள் என்னுடைய உடலை வைத்து டார்கெட் செய்து என்னை வெளியே அனுப்பி விட வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். எல்லோரும் என்னுடைய உடல் நிலையை பற்றி பேசினார்கள். அதனால் தான் நான் அவர்களிடம் எனக்கு பலமான பேச்சை வச்சே அவர்களை சுத்த விட்டேன்.

அந்த நிகழ்ச்சிக்குள் எனக்கு சிம்பதி உருவாக்குவதற்கு துளி கூட விருப்பம் கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன முதல் நாள் தான் என்னுடைய அப்பாவிற்கு ஆப்ரேஷன் செய்தாங்க. நான் அந்த நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது அது பற்றி பேசி மக்கள் மத்தியில் அனுதாபம் ஓட்டு பெற விரும்பவில்லை. அதனால் தான் அதைப் பற்றி பேசவில்லை. ஆனால் என்னுடைய மனைவி பற்றி பேசி அழுதேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.
எனக்கு அந்த இடத்தில் இருந்த வருத்தம் தான் கண்ணீராக உடைந்து விட்டது. சில பெண் போட்டியாளர்கள் என்னிடம் வேண்டுமென்று உங்களுக்கு உதவி செய்யணும் அண்ணா என்று கேட்டார்கள். நான் அங்கு தண்ணீருக்கு பாதுகாவலராக இருந்ததால் அங்கு வரும் பெண்களிடம் தண்ணீர் தான் கேட்டு இருக்கேன். அதையும் நான் ரவீந்தருக்காக உதவி செய்தேன் என்று அதை மிகைப்படுத்தி பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது.
அதுபோல கூட இருந்தவர்கள் முதுகில் குத்தியதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் நான் அழுதேன். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதி பெஸ்ட்டா அல்லது கமல்ஹாசன் பெஸ்ட்டா என்று கேட்டால் என்ன பொருத்தவரைக்கும் கமல்ஹாசன் தான் என்று சொல்வேன்.
கமல்ஹாசன் இடத்தை யாராலும் அடைய முடியாது. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான ஒரு ட்ரெண்ட் செட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் விஜய் சேதுபதி முன்பு எப்படி மக்களுக்கு புரியாத மாதிரியே ரவீந்தர் பேசினாரோ அது போலவே குழப்பம் ஏற்படுத்துற மாதிரியே பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications