ரீல்ஸ் வெறி! கேமரா முன்பு ஆடைகளை முழுசாக கழட்டி தம்பதி செய்த செயல்! எங்கே போகுது சமுதாயம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியாவில் லைக், வியூஸ், பாலோவர்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சிலர் என்னவென்றாலும் செய்ய தயாராகி விட்டார்களா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் தான் இப்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது தேனிலவுக்கு சென்ற ஒரு தம்பதி தங்களுடைய ஆடைகளை அவிழ்த்து அதை வீடியோவாக வெளியிட்டிருப்பது தான் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்வது, அங்கு எடுத்த அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்களை கூட கேமரா முன்பு கொண்டு வந்து அதை ரீல்ஸாக வெளியிடுவது எந்த அளவுக்கு சரி என்பதுதான் இப்போது எழுந்து கேள்வி.

தேனிலவு வீடியோ

வைரலாகும் அந்த வீடியோவில் புதுமண தம்பதிகள் ஹோட்டல் அறையில் இருக்கும் காட்சிகள் இருக்கிறது. கணவர் கேமராவை பார்த்ததும் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார். அதற்கு மனைவி அவரை சமாதானப்படுத்தி கேமரா முன்பு ஒவ்வொரு ஆடைகளை கழட்டி சில்மிஷங்களில் ஈடுபடும் விஷயங்களை கூட ரீல்ஸாக எடுத்து வைத்திருக்கிறார்கள். அப்போது கணவர் வெக்கப்பட்டு முகத்தை மூடிக்கொள்ள, அதை பார்த்து மனைவி சிரிப்பதும் அந்த வீடியோவில் இருக்கிறது. இதெல்லாம் மேலாக அந்த வீடியோவின் கடைசியில் இதைப் பற்றிய உங்களுடைய கமெண்ட் என்ன என்பதை சொல்லிட்டுப் போங்க என கேட்கப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் போது, அட மானங்கெட்டவங்களே... ரீல்ஸுக்காக இவ்வளவு கேவலமாவாக நடந்துக்குவீங்க என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கின்றனர்.

Viral video Instagram reels Vijay TV

ஆபாசமான ரீல்ஸ் வீடியோ

கணவன் மனைவிக்குள் நான்கு சுவற்றுக்குள் நடக்கும் விஷயத்தை இப்படி சோசியல் மீடியாவில் ரீல்ஸாக வெளியிட்டால் கணவன் மனைவிக்குள் என்ன ரகசியம் இருந்து விடப்போகிறது? சோசியல் மீடியாவில் இருந்து வரும் வருமானத்திற்காக இவ்வளவு மோசமாகவா இறங்கி விட்டிங்க? அப்போ நீங்க எல்லாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழுறீங்க? என்பது பலருடைய கேள்வியாக இருந்தாலும் இப்போ இதையே பலரும் செய்ய தொடங்கி விட்டார்கள் என்பது தான் உண்மை.

முதலிரவு அறை ரீல்ஸ்

சோசியல் மீடியாவில் முதலிரவு காட்சிகளை கூட பலர் ரீல்ஸ் வீடியோவாக போடத் தொடங்கி விட்டார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால் குழந்தைகள் முன்பு கணவன் மனைவி இருவரையும் ரூமுக்குள் பூட்டுவது, குழந்தைகளோடு ரூமுக்குள் சென்று மனைவி கணவனுக்கு பால் டம்ளர் கொடுப்பது, அவர்களுடைய ரூமுக்குள் என்ன நடக்கிறது என்பதை வீடியோவாக எடுப்பதெல்லாம் இப்போ ரீல்ஸ்களில் பார்க்க முடிகிறது.

இதையெல்லாம் பார்த்து பலர் மனம் நொந்து போய் கமெண்ட்ஸ் கொடுத்தாலும், ஒரு சில இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் போய்விடுங்கள் என்று சொல்லி வருகிறார்கள். இதைப் பார்க்கும் இன்னொருவருக்கு இதேபோல நாம வீடியோ வெளியிடலாம் என்று ஆசை வரலாம். அதே சமயத்தில் அவருடைய பார்ட்னருக்கு இதில் விருப்பமில்லாமல் இருந்த இருந்தால் இதை வைத்து கூட அடுத்தவர்கள் வீட்டில் சண்டை வரலாம். எதற்கெல்லாம் இது போன்ற மோசமான ரீல்ஸ் வீடியோக்களும் காரணமாகி விடுகிறது.

நீயா நானா விவாதம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்க ஆசைப்படும் துணை, அதற்கு ஒத்துக்கொள்ளாத அவர்களுடைய கணவன் அல்லது மனைவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் நாங்க ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசைப்படுகிறோம் ஆனால் எங்களுடைய கணவனோ அல்லது மனைவியோ எங்களுக்கு கம்பெனி கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று வருத்தத்தை சொல்லி இருந்தார்கள்.

நிர்வாண போட்டோ அனுப்ப சொல்லி தொந்தரவு.. காதலன் வெளியிட்ட வீடியோ! விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை
அந்த நிகழ்ச்சியில் நார்மலாக டான்ஸ் ஆடி, பாட்டு பாடி ரில்ஸ் வீடியோ எடுப்பது பற்றி விவாதம் நடந்து இருந்தாலும் கூட அதிலும் சிலர் எங்களுக்கு இப்படி கேமரா முன்பு நின்று ஆடி அதை மற்றவர்கள் பார்த்து கமெண்ட் போடுவது பிடிக்காது என்று சொல்லி இருந்தனர். அதுபோல இப்படி மோசமான வீடியோக்களை எடுப்பதற்கு கூட பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் அந்த பெண் எந்த கூச்சமும் இல்லாமல் கமெண்ட் வர வேண்டும் என்பதற்காகவே உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்று செய்வது அடுத்தவர்களின் பாலுணர்வை தூண்டி இவர்களுடைய வியூஸ், கமெண்ட் ஏற்றுவதற்காக மோசமான வேலைகளை பார்த்து வருகிறார்கள். இப்படி ஆபாசமாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+