"எங்கே அந்த வெண்ணிலா” நடிகையை ஞாபகம் இருக்கா? 43 வயதிலும் அதே அழகு! இப்போ என்ன பண்ணுறாங்க தெரியுமா?
சென்னை: 90ஸ் மற்றும் 2000-களில் தொடக்கத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த பல நடிகைகள் இன்று குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தாலும் அவர்கள் வெளியிடும் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் பெரிய பேசும் பொருளாக மாறி விடுகிறது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் நடிகை அனிதா ஹசானந்தானி.
வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்கிரன் போன்ற படங்களில் பார்த்த அந்த க்யூட் ஹீரோயினா இன்று ரசிகர்களை ஆச்சப்படும் அளவிற்கு 43 வயதிலும் இளமையான தோற்றத்தில் இருக்கும் அவரது சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எங்கே அந்த வெண்ணிலா பாடல் அனிதா
தமிழ் ரசிகர்களுக்கு அனிதாவை நினைத்தாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற 'எங்கே அந்த வெண்ணிலா" பாடல் தான். அந்த காலத்தில் இளைஞர்களின் ஃபேவரிட் பாடல்களில் ஒன்றாக இருந்தது. அந்தப் படத்தில் அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் சிரிப்பு பெரிதாக ரசிகர்களால் கவர்ந்தது. அந்த பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அனிதாவிற்கு அதிகமான ரசிகர்களும் கிடைத்து விட்டனர்.

தமிழில் அதிக படங்கள் இல்லை
1999 இல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அனிதா 2002ல் வருஷம் எல்லாம் வசந்தம் படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அதற்கு பிறகு விக்ரமுடன் சாமிராய், விஜய் ஆண்டனியின் சுக்கிரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மொழிகளில் ஏராளமான படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து இருந்தார். குறிப்பாக ஹிந்தி டிவி உலகில் முன்னணி நடிகையாக பல வருஷங்கள் பிசியாக இருந்தார்.

திருமண வாழ்க்கை
2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரோஹித் ரெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனிதா. இந்த தம்பதிக்கு ஆரவ் ரெட்டி என்ற மகன் இருக்கிறார். மகன் பிறந்த பிறகு குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் சினிமாவையும் முழுமையாக விட்டு விலகவில்லை. குடும்பம், குழந்தை, நடிப்பு ஆகியவற்றை சமநிலை படுத்தி வாழ்ந்து வருகிறார் அனிதா.

தற்போது முக்கியமாக ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள், வெப் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் கலந்துகொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது குடும்ப புகைப்படங்கள், உடற்பயிற்சி வீடியோக்கள், ஃபேஷன் போட்டோ சூட்டுகள், மகனுடன் இருக்கும் அழகான தருணங்கள் என தொடர்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் இவருக்கு 43 வயதா நம்பவே முடியவில்லை, இப்பவும் அதே இளமை என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
