‘காக்கா முட்டை’ பட சின்ன பையனை நினைவிருக்கா? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரு! தற்போதைய நிலை குறித்து உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் சில படங்கள் வெறும் வெற்றிப்படங்களாக மட்டும் இல்லாமல், தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் உணர்வுகளாக மாறிவிடும். அப்படிப்பட்ட பட்டியலில் நிச்சயம் இடம் பெறும் படம் 'காக்கா முட்டை'. இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 2015-ல் வெளியான இந்த படம், சாதாரண ஏழைச் சிறுவர்களின் ஆசை, பசி, வாழ்க்கை போராட்டம், சமூக வேறுபாடு ஆகியவற்றை மிக எளிமையாகவும் மனதை உருக்கும் விதமாகவும் சொல்லி ரசிகர்களின் இதயத்தை வென்றது.

காக்கா முட்டை படம் பின்னணி
'பீட்சா சாப்பிட வேண்டும்' என்ற ஒரு சாதாரண ஆசையை மையமாக வைத்து உருவான இந்த படம், இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்றது. குறிப்பாக பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை கதாபாத்திரங்களில் நடித்த சிறுவர்கள் ரசிகர்களின் மனதில் இன்னும் அதே முகத்தில்தான் இருக்கிறார்கள்.
சின்ன காக்கா முட்டை
அந்த சின்ன காக்கா முட்டை ரமேஷ் பற்றிய ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், 'காக்கா முட்டை' படத்தில் அவருடைய அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுடன் ரமேஷ் கலந்து கொண்டார். அந்த தருணமே பலருக்கு செம்ம nostalgia moment ஆக மாறிவிட்டது. காரணம், அந்த படத்தில் சின்ன பையனாக இருந்த ரமேஷ் இப்போது ஆளே மாறி பெரிய இளைஞனாக இருக்கிறார்.
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரமேஷ் மிகவும் ஜாலியாக, "நானும் குழந்தையாகவே இருந்திருக்கலாம்னு தோணுது. இப்போ வெளியே போனா எல்லாரும் 'இவ்வளவு வளர்ந்துட்டியான்னு' கேக்குறாங்க. அதுக்காக நான் என்ன பண்ண முடியும்? எனக்கும் வயசு ஆகுது, மாற்றங்கள் நடக்குது. எல்லாரும் அப்பதான் க்யூட்டா இருந்தேன்னு சொல்லும்போது, ஏன்டா பெரிய பையனா வளர்ந்தோம்... அப்படியே சின்ன பையனாவே இருந்திருக்கலாமேன்னு தோணும்" என்று கூறினார்.
அதை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உடனே பாசமாக அவரது முதுகை தட்டி, "நீ இப்பவும் குழந்தை தான்டா" என்று சொன்னார். அதற்கு ரமேஷ் சிரித்தபடி, "வளர்ந்த குழந்தை... அவ்வளவுதான்" என்று பதிலளித்தார். இந்த cute interaction தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரமேஷின் சினிமா பயணமும் சுலபமானதாக இருக்கவில்லை. 'காக்கா முட்டை' மூலம் தேசிய விருது பெற்ற பிறகு பெரிய வாய்ப்புகள் குவியும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. மொட்ட சிவா கெட்ட சிவா, அறம், பிழை, தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில படங்களில் நடித்தாலும், ஹீரோ லெவலுக்கு முன்னேற முடியவில்லை.

ரசிகர்கள் கருத்து
சமீபத்திய ஒரு பேட்டியில், வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை அவர் உருக்கமாக பகிர்ந்திருந்தார். "நான் நடித்த படங்கள் ஹிட். ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு போக முடியல. ஒரு நேரத்தில் வீட்டுக்கு திரும்ப போக கூட காசு இல்லாத நிலை வந்தது. எனக்கு ஆதரவா இருந்தது என் அம்மாதான்" என்று கூறியிருந்தார்.
இப்போது இந்த வைரல் வீடியோவை பார்த்த 90s, 2K கிட்ஸ் பலரும், "நாங்க காக்கா முட்டை பார்த்தப்போ ஸ்கூல் படிச்சுட்டு இருந்தோம்... இந்த பையன் இப்போ இவ்வளவு வளர்ந்துட்டானே!" என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் பீட்சாவுக்காக ஓடிய அந்த சின்ன பையன், இன்று வாழ்க்கைக்காக போராடும் இளைஞனாக மாறியிருப்பது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
ஜூன் 5க்குள் நான் வரலைனா போலீசுக்கு போயிடு! காதலனுக்கு வந்த வீடியோ.. காட்டித் தந்த ஆந்திரா சக்தி ஆப் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
5 மணி நேரம் ரயில் லேட்டா வந்தா யார் பொறுப்பு? பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் பயணிக்கு ரூ.500 அபராதம் -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications