யானை படம்: வனிதா விஜயகுமாரை குடும்பத்துல சேர்த்துக்குவீங்களா? அருண் விஜய்யிடம் நிருபர் வைத்த கேள்வி
சென்னை: யானை படத்தில் குடும்ப ஒற்றுமை குறித்து சொல்லியிருக்கும் நீங்கள் நிஜத்தில் வனிதா விஜயகுமாரை ஏற்றுக் கொள்வீர்களா என செய்தியாளர் ஒருவர் அருண்விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். இவர்களுக்கு கிடைத்த அளவு பட வாய்ப்புகள் இவரது பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன்தான் அருண் விஜய். இவருக்கு அந்த அளவுக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஓரிரு படங்களில் நடித்த இவர் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்த இவருக்கு தற்போது சில படங்கள் கைகொடுத்து வருகின்றன. அது போல் தான் மஞ்சுளாவுக்கு விஜயகுமாருக்கும் பிறந்த வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.

வனிதா விஜயகுமார்
இவர்களில் வனிதா விஜயகுமாருடன் குடும்ப தகராறு இருந்து வருவதால் விஜயகுமார் உள்பட மற்ற உறுப்பினர்கள் யாரும் இவரிடம் பேசுவதில்லை. இந்த ஏக்கம் வனிதாவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் விஜயகுமாரும் அவரது மகன், மகள்கள் ஆகியோர் ஒரே உடை அணிந்து எடுக்கும் செல்பி படங்களை அவர்களது இன்ஸ்டாவிலிருந்து எடுத்து வனிதா ஷேர் செய்வார்.

குடும்ப போட்டோ
அப்போது விரைவில் இது போன்ற குடும்ப போட்டோவில் நீங்கள் இருப்பீர்கள் என ரசிகர்கள் வாழ்த்து அவரை ஆசுவாசப்படுத்துவர். இந்த நிலையில் அருண் விஜய் தனது சகோதரியின் கணவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற பயத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஒரு குடும்ப பாசத்தை சொல்லும் கதையாகும். 3 அண்ணன்கள், அவரது தம்பியாக அருண் விஜய் என பாச பிணைப்புடன் எடுக்கப்பட்டது.

அருண் விஜய்
ஆனால் அருண் விஜய் அவருடைய தகப்பனாரின் இரண்டாம் தாரத்திற்கு பிறந்தவர். இதனால் மற்ற மூவரான சமுத்திர கனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் ஆகியோர் அருண் விஜய் மீது பாசத்தை காட்டமாட்டார்கள். ஒரு பிரச்சினையில் அருண் விஜய்யை மற்ற 3 அண்ணன்களும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். குடும்பத்தை ஒன்று சேர்க்க அருண் விஜய் பாடுபடுகிறார்.

படத்தின் கரு
இந்த படத்தின் கருவே குடும்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான். மேலும் இந்த படம் கிட்டதட்ட விஜயகுமார் குடும்ப பிரச்சினைகளை காட்டுகிறது. இந்த படம் வெளியான அன்று ரசிகர்களுடன் இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் படம் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர் ஒருவர் "குடும்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, ஒற்றுமையா இருக்க வேண்டும் என படத்தில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே ஒருவர் தனியாக இருக்கிறார்.

அருண் விஜய் பதில்
அவரை சேர்த்துக் கொள்ள போறீர்களா" என கேள்வி எழுப்பினார். அப்போது அருண் விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார். உடனே பின்னால் இருந்த ஒருவர் அந்த செய்தியாளரிடம் இது படத்தை பத்தின விஷயம் எனவே படத்தை பற்றி மட்டும் கேளுங்க" என சொன்னதற்கு அருண் விஜய்யும் "ம்ம்" என ஆமோதித்தார். பின்னர் எந்த பதிலையும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications