அவர் கொஞ்ச.. இவர் மிஞ்ச.. அடடா இதுதான் லவ்வா.. கலக்கும் ரேஷ்மா!
சென்னை : அட கல்யாணம் எப்போ என்று கேட்டால் சொல்ல மாட்டீங்க ஆனால் இப்படி கொஞ்சுறதை பார்க்கும்போது சிங்கிள்ஸ்க்கு கஷ்டமா இருக்குமா!??இல்லையா!?? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரேஷ்மாவைப் பார்த்து கலாய்க்கின்றனர் ரசிகர்கள்
அபி டெய்லர் சீரியலில் ஒன்றாக நடித்து வரும் ரேஷ்மாவும் மதனும் தான் இப்போ நிஜ காதலர்களாக மாறி ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார்கள். லவ்வுன்னா சாதா லவ்வெல்லாம் இல்லை, அப்படி ஒரு ஸ்பெஷல் லவ்வு.
ரீல் காதலர்கள் நிஜக் காதலர்களாக மாறியது தான் மாறினார்கள், அவர்களின் அன்புத் தொல்லை தாங்கவில்லைப்பா என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அப்படி சொல்லும் அளவுக்கு ஒரு ரீல் போட்டு கலக்கியுள்ளனர் இருவரும்.

பூவே பூச்சூடவா - அபி டெய்லர்
சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலிப்பது எல்லாம் புதிதல்ல. அதுபோலத்தான் பூவே பூச்சூடவா சீரியலில் சீரியலில் அண்ணியும் கொழுந்தனுமாக நடித்து இருந்தாலும், அதெல்லாம் நடிப்பு மட்டும்தான். அதைத்தாண்டி நாங்கள் வேறு என்பதை இப்போ இந்த ஜோடிகள் நிரூபித்து இருக்கின்றனர். அபி டெய்லரில் நடிக்கும் மதன் ஏற்கனவே அனைவருக்கும் பரிச்சயமான நபர்தான். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர். அதிகமாக இவருக்கு பெண்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியின் மூலமாக ரொம்பவே பிரபலம் அடைந்து விட்டார்.

இருவரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
அதுபோல ரேஷ்மாவும் நானும் யாருக்கும் சளைத்தவரல்ல என்று இப்போ சீரியலின் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரும் ஜீ தமிழில் முதன்முறையாக டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டையை கிளப்பி தனக்குன்னு அங்கீகாரத்தை பெரிய அளவில் உருவாக்கிவிட்டார். இவருடைய டான்ஸை பார்ப்பதற்காகவே பலர் ஜீ தமிழில் காத்திருந்தனர். அந்த அளவிற்கு இவர் முதல் டிவி ஷோவில் தோன்றியிருந்தாலும், வசீகரிக்கும் முக அழகினாலும் தன்னுடைய நடன திறமையாலும் அனைவரின் மனதிலும் நன்றாக இடத்தை பிடித்து விட்டார். அதற்கு பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கரும்பு தின்ன கூலியா
பூவே பூச்சூடவா சீரியலின் மூலமாக முதல்முறையாக கதாநாயகியாக காலடி எடுத்து வைத்திருந்தாலும், இப்ப வரைக்கும் வேற லெவல் தான் பர்பாமன்ஸ் கொண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் இப்போது கலர்ஸ் டிவியில் அபி டெய்லர் என்னும் சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் இவருடைய ஜோடியாக மதன் நடிக்கிறார். இந்த சீரியலில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் முடியுமா? அல்லது நண்பர்களாகவே இருப்பார்களா? கல்யாணத்திற்குப் பிறகும் அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க போகிறார்கள்? என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அதே பைக் அதே பாவாடை தாவணி
ஏற்கனவே இவர் பூவே பூச்சூடவா சீரியலில் சமையல்காரராக எக்ஸெல் பைக்கில் வலம் வருவார். அதேபோலத்தான் தற்போதும் அபி டெய்லர் சீரியலில் அபி டெய்லராக அதே எச்ஸெல் பைக்கில் பாவாடை தாவணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மீண்டும் இவரை இந்த மாதிரியாக பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இவர்களின் காதல் இன்னும் இந்த சீரியலில் வரவில்லை என்றாலும் நிஜக் காதல் இவர்களுக்குள் எப்போதோ பூத்து விட்டது. அது அவருடைய ரசிகர்களுக்கும் ஏற்கனவே தெரியும்..இவர்கள் இருவரும் காதலித்து வருவதும் சிம்பிளாக எங்கேஜிமெண்ட் முடிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், கல்யாணம் எப்போது என்று தான் யாருக்கும் தெரியவில்லை.
Recommended Video

கண்ணிலே தெரியுதே அந்த அன்பு
கல்யாணத்தைப் பற்றி மட்டும் கேட்டாலே இவர்கள் பொறுத்திருங்கள் இப்போது தானே புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறோம் சீக்கிரத்தில் சொல்லுகிறோம் என்று சொல்லியிருக்கின்றனர். சீரியலில் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ரீல்ஸ் விடியோஸ் களையும் எடுப்பதில் தவறவில்லை. அந்த மாதிரிதான் இப்போ கூட, 'கிட்ட கிட்ட வா வா வானு காதல் வந்து கை நீட்ட' என்னும் பாட்டுக்கு ரீல்ஸ்ஸ் வீடியோவை போட்டு இருக்கின்றனர். ஆனால் அதற்கு கேப்ஷன் தான் ரேஷ்மா வேற லெவலில் கொடுத்திருக்கிறார். இது ரியலா அல்லது ஆக்டிங்கா என்று ஹெஸ் பண்ணுங்க பார்ப்போம் என்று கூறியிருக்கின்றார். இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் நீங்கள் ரியலாக பேசிக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்து விட்டனர். அதை இப்போ ரிலீஸ போட்டு விட்டீர்களே சரிதானா!??ரசிகர்கள் உண்மையை கண்டு பிடித்ததும் அதை ரேஷ்மா வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications