சீரியலில் இனி நான் இருப்பேனா என தெரியாது..பாக்கியலட்சுமி ராதிகா வெளியிட்ட வீடியோ..காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ராதிகா கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் இனி நான் இந்த சீரியலில் தொடர்வேனா இல்லையா என தெரியாது என்று கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் விலக போகிறேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார்கள். அந்த வகையில் ராதிகாவாக நடித்து பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் லைவில் சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ரேஷ்மா வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் இப்போது அதிகமான சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோசூட் நடத்தியும், பல நேரங்களில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்.

அந்த மாதிரி தான் நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதிகமான ரசிகர்கள் தன்னிடம் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் மாறப் போகிறாரா? என்று கேட்டு வருகிறார்கள். அது என்ன என்று எனக்குத் தெரியாது. சொல்லப்போனால் அடுத்து நானே இருப்பேனா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. இந்த சீரியலில் எப்ப வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம் யாரும் விலகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக நான் தொடர்வேனா இல்லையா என்று எனக்கு தெரியாது. அது போல தான் கோபி நிலமையும் எனக்கு தெரியாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே கோபி கேரக்டரில் இருந்து சதீஷ் விலகுவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இந்த முடிவு வேண்டாம் என்று சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து சதீஷ் குதர்க்கமான பதில்களை தினமும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் ராதிகாவும் இந்த சீரியலை விட்டு விலகி விட்டால் சீரியல் கதை நன்றாக இருக்காது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். காரணம் ராதிகா இப்போது பாக்கியா வீட்டில் இருக்கும் நிலையில் கோபியை ராதிகா படுத்தும் பாடு பலரும் பாராட்டி வருகின்றனர். அது போல பாக்யா மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே வரும் மோதல்களும் விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் சீரியலில் அடுத்தடுத்து கேரக்டர்கள் மாறுவது டிஆர்பி வெகுவாக குறைக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications