பளிச்சென்ற அழகை வெளிச்சம் போட்டு காட்டிய ரேஷ்மா...கலகலத்துப் போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னழகை பார்க்கவா பின்னழகை பார்க்கவா என்று ரசிகர்கள் குழம்பி போகிற வகையில் பின்னாடி மூங்கில், முன்னாடி ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களை மிரட்டி விட்டார்.

கையைத் தூக்கி கலக்கலாக போஸ் கொடுத்தாலும் ரசிகர்களின் கண்கள் மேய்வது என்னவோ இவருடைய முகத்தில் தானாம்.

சல்லடை போன்ற புடவையில் மெல்லிடையை காட்டிய இவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கிறார்கள்.

கிக்காக தான் இருக்கு

கிக்காக தான் இருக்கு

மூங்கில் போன்று ஒய்யாரமாக மூங்கில் முன்னால் நின்று கொண்டு... தலை கோத தூக்கிய கை கேப்பில்...கொஞ்சம் இடுப்பையும் காட்டி...கிக் ஏற்றி இளசுகளை கொஞ்சம் சொக்க வைத்திருக்கிறார் ரேஷ்மா. நம்ம புஷ்பா அக்காவ ஸ்லீவ்லெஸ் கெட்டப்புள பார்த்த நம்ம ரசிகர்கள் கொஞ்சம் ஸ்பீச்லெஸ் ஆகிட்டாங்க!
பிக்பாஸ் முன்னாடி வரைக்கும் ரேஷ்மாவ..ரேஷ்மானு யாருக்குமே தெரியாம இருந்துச்சு.ஏன்னா அவர் அதுக்கு முன்னாடி நடித்திருந்த புஷ்பா கேரக்டர் தான்.

சீரியலில் அறிமுகம்

சீரியலில் அறிமுகம்

இவர் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வம்சம் சீரியலில் துணை நடிகையாக அறிமுகமாகி வாணி ராணி, ஆண்டாள் அழகர்,மற்றும் பல சீரியல் களிலும், மசாலா படம்,கோ 2, மற்றும் சில படங்களில் நடித்திருந்தாலும், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்கிற படத்தில் சூரியுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்த புஷ்பா கேரக்டர்தான் இவரை எளிதில் பிரபலமாக்கியது. இவரது தந்தை பிரசாத் ஒரு பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆக இருந்தாலும் இவர் ஆர்வம் என்னவோ நடிப்பு பக்கம்தான் இருந்தது. தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா, மற்றும் கண்ணாண கண்னே சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

பிக்பாஸில் புது வாழ்க்கை

பிக்பாஸில் புது வாழ்க்கை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு திரையுலகம் மட்டுமின்றி மக்களுக்கும் இவர் மீது இருந்த பார்வை கொஞ்சம் மாறியது என்று சொல்லலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் வாழ்வில் கடந்துவந்த தடைகளையும் அதை எவ்வாறு தாண்டி சமாளித்தார் என்பதையும் அவர் கூறும்போது அனைவரும் பாவம் என்று உச்... கொட்ட தான் செய்தனர். இவருடைய போல்ட்னஸ்யை நினைத்து ஆச்சரியமும் அடைந்தனர்.

கிளாமர் கொஞ்சம் தூக்கல் தான்

கிளாமர் கொஞ்சம் தூக்கல் தான்

சீரியலில் பொத்தி வச்ச பொண்ண நடிச்ச அந்த ரேஷ்மா,புஷ்பாங்குற கிளாமர் கேரக்டர்தான் நம்மள ஃபேமஸ் ஆக்குச்சுன்னு நினைச்சாரோ! என்னவோ ?அப்படியே வண்டியை கிளாமர் பக்கமும் கொஞ்சம் திருப்பிட்டாரு. இங்க தமிழ் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து சேலையில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை அப்லோட் செய்ய ஆரம்பித்துவிட்டார். பொதுவாக சேலைக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் நம்ம ஊர்ல, சேலையில் வரும் ஹாட் போட்டோக்கள் என்றால் சும்மா விடுவார்களா? ரேஷ்மாவை பிக் பாஸ்யைவிட பலமடங்கு பிரபலமாகும் அளவிற்கு அவரது போட்டோக்களை லைக் மற்றும் கமெண்ட் செய்து வைரல் ஆக்குவதை வழக்கமாக்கிக் விட்டார்கள்.

கேப்ஷனில் என்ன இருக்கு

கேப்ஷனில் என்ன இருக்கு

"ஒரு உறுதியான பெண்ணிற்கு தெரியும் தான் கண்ணீரோடு இருந்தாலும், நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கையை அழகாக கொண்டு செல்ல." இந்த அழகான வார்த்தைகளை பெண்களுக்கு ஒரு மோட்டிவேஷனல் கருத்தாக சொல்லி இருக்கிறார். கேப்ஷன் என்னவோ பெண்களுக்குத்தான் ஆனால் அதற்கு போட்ட போட்டோ ஆண்களுக்கு தானா! என்று நினைக்கத் தோன்றும் வண்ணம் ஆண்களே அதிகமாக அந்த போட்டோவை குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.பாடமா முக்கியம் படம் தான் முக்கியம் என நினைத்து விட்டார்கள் போல!!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+