என் மகள் கேட்ட கேள்வி.. “அந்த” பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது..! நடிகர் சூர்யா எமோஷனல்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் நேற்று மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கங்குவா திரைப்படத்திற்கு முதல் நாளே பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் அந்த திரைப்படம் முதல் நாள் அதிக வசூல் செய்திருந்தது. ஆனால் ரெட்ரோ திரைப்படம் அந்த திரைப்படத்தை விட குறைவாக வசூல் செய்திருந்தாலும் பாசிட்டிவ் வைப்ரேஷனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய மகள் குறித்தும், சித்தா திரைப்படத்தில் இடம் பெற்ற 'அமுதக்கடல் உனக்குத்தான்' பாடல் பற்றியும் எமோஷனலாக பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில வருடங்களாகவே சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர் பற்றிய சர்ச்சை செய்திகளும் பரவி விடுகிறது. சூர்யா தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக பல குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். ஆனாலும் அவர் சில இடங்களில் பேசிய பேச்சு ட்ரோல் செய்யப்பட்டது. அதன் காரணமாக இப்போது அவரும் சரி அவருடைய குடும்பத்தினரும் பேசுவது பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சிவகுமார் சர்ச்சை பேச்சு
சமீபத்தில் கூட சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவான நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா தான் என்று பேசியது சர்ச்சை ஆனது. ஆனாலும் அதற்கு சூர்யா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதன் நிலையில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சூர்யா பேட்டி
இந்த நிலையில் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் போன்றோர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சந்தோஷ் நாராயணன் இசை பற்றி சூர்யா பெருமையாக பேசி இருக்கிறார். சூர்யா, பேசுகையில் வாழ்க்கையில் நம்முடன் கனெக்ட் ஆகும் ஒரு சில பாடல்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். நம் உணர்வுகளை இன்னும் உண்மையானதாக மாற்றும்.

சித்தா பட பாடல்
இப்போது என்னுடைய மகள் அமெரிக்காவுக்கு படிக்கப் போவதால் அடிக்கடி சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுதக்கடல் உனக்கு தான்" என்ற பாடலை தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த பாடலை கேட்கும் போது தாரைதாரையாக அழுகை வருகிறது. ஒரு நாள் மூன்று மணிக்கு நான் நைட் ஷூட்டிங்கில் இருக்கும்போது என்னுடைய மகள் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் அமெரிக்கா செல்வது பற்றி அவர் பேசியிருந்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது நான் தற்செயலாக அந்த பாட்டை கேட்டுக் கொண்டிருந்தேன்.
மகள் பற்றி சூர்யா எமோஷனல்
என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அழுகை வர தொடங்கியது. அதற்கு முன்பே நான் அந்த பாடலை கேட்டு இருக்கிறேன். நீங்கள் அதாவது சந்தோஷ் நாராயணன் சித்தார்த் பாடுவதை நேரில் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான எமோஷனலோடு கலந்த பிறகு அந்த பாடலை எங்கு கேட்டாலும் என் மகள் என்னிடம் பேசிய அந்த நாள்தான் நினைவிற்கு வரும் என்று சூர்யா பேசுகிறார்.
சந்தோஷ் நாராயணன் பேட்டி
அதுபோல சித்தா படத்தில் 'அமுதக்கடல் உனக்குத்தான்' பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசும்போது எனக்கு சித்தா படம் மிகவும் பிடித்திருந்ததால் ஒரு கிப்ட் ஆக தான் நான் அந்த பாடலை பண்ணி கொடுத்தேன். நீங்க இந்த படத்தில் முடிந்தால் வைங்க இல்லனா சும்மா ரிலீஸ் பண்ணுங்க என்று கொடுத்தேன் என்று சந்தோஷ் நாராயணன் பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications