Retro Box Office Collection: 2025ல் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ரெட்ரோவுக்கு எந்த இடம்?
சென்னை: இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளே அதிக வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த படம் ரெட்ரோ என சொல்லப்படுகிறது. மொத்தம் வெளியான 9 படங்களில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதே வேளை கடந்த ஆண்டு வெளியான கங்குவா வசூலை விட ரெட்ரோ முதல் நாள் வசூல் குறைவுதான்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜை ஹெக்டே நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. இந்த படம் வெளியான முதல் நாளே நல்ல வசூலை வாரி தந்தது.
இரண்டாவது நாளும் அதே நிலை இருந்தது. நேற்றைய தினம் உலகம் எங்கும் 11 கோடி ரூபாய் வசூலை குவித்தது. அதாவது முதல் நாள் உலகமெங்கும் 35 கோடி வசூலானது. எனவே ரெட்ரோ இன்று வரை கடந்த இரு தினங்களில் 46 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
தமிழகத்தில் எவ்வளவு வசூல்
அது போல் தமிழகத்தில் 14.9 கோடியும் வெளிநாடுகளில் 11.4 கோடியும் வசூலானதாக சொல்லப்படுகிறது. அது போல் ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் 2.85 கோடியும், கர்நாடகாவில் 2.85 கோடியும், கேரளாவில் 2.5 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் 0.5 கோடியும் வசூலானது.
9 தமிழ் படங்கள்
உலகமெங்கும் இந்த ஆண்டு 9 தமிழ் படங்கள் வெளியாகின. அதாவது குட் பேட் அக்லி, விடாமுயற்சி, ரெட்ரோ, டிராகன், மதகஜராஜா, வீர தீர சூரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், காதலிக்க நேரமில்லை, கேங்கர்ஸ்.
முதல் நாள் வசூல்
இதில் முதல் நாளே அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் ரெட்ரோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் 51.5 கோடியுடன் குட் பேட் அக்லியும், 48 கோடி ரூபாயுடன் விடாமுயற்சியும் உள்ளது.
35 கோடி வசூல்
தற்போது ரெட்ரோ 35 கோடி வசூலை குவித்துள்ளது. மத கஜ ராஜா 5 கோடியும், வீர தீர சூரன் 4 கோடியும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ரூ 3.5 கோடியும். காதலிக்க நேரமில்லை 2.9 கோடி ரூபாயும், கேங்கர்ஸ் 2 கோடியும் வசூலானது.
கங்குவா 40.2 கோடி
முதல் நாளில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா 40.2 கோடி வசூல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் நாள் வசூலில் ரெட்ரோ கங்குவாவைவிட குறைவாகவே வசூலித்துள்ளது. ரெட்ரோ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 160 கோடி. தமிழகத்தில் 550 திரைகளிலும் உலகம் முழுவதும் 2500 திரைகளிலும் ரிலீஸானது.
ரெட்ரோ பட்ஜெட்
ரெட்ரோ படத்தின் பட்ஜெட்டான ரூ 160 கோடியை வசூலித்துவிட்டால் இந்த படம் நிச்சயம் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சுப்புராஜ்- சூர்யா கூட்டணி
முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் சூர்யாவும் இணைந்ததால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. கனிமா பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்த படத்தில் கடைசி 20 நிமிடங்கள்தான் ட்விஸ்ட். ஆனாலும் ஆழம் அதிகமில்லை. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications