கட்டியணைத்து முத்தம்.. யாஷிகாவோடு காதல்..!? மனம் திறந்த ரிச்சர்ட்..வெளிவந்த ரகசியம்
சென்னை: நடிகை யாஷிகாவும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் சில நாட்களுக்கு முன்பு ஜோடியாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர்.
இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
இது குறித்து முதல் முறையாக ரிச்சர்ட் மனம் திறந்து பேசி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர் தான். இவர் நடித்த திரைப்படங்களில் அதிகமாக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். தன்னுடைய instagram பக்கத்தில் இவருக்கு 4கே பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
இந்த நிலையில் யாஷிகா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் வழக்கமானது தான். யாஷிகா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் ஹெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்து சின்னத்திரை ரசிகர்களையும் பாடாய்படுத்தி எடுத்து இருந்தார். சீரியலிலும் கிளாமர் உடையில் பலருடைய தூக்கத்தை கெடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இளைஞர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவருடைய ரசிகர்களை எந்த பக்கமும் போக விடாமல் இவரை சுற்றியே லைக் பட்டன் தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியோடு யாஷிகா ஆனந்த் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ரிச்சர்ட் ரிஷி யாஷிகா ஆனந்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு," சூரிய முத்தத்திற்கு பிறகு" என்று ஒரு புகைப்படத்தை வெளியிட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிச்சர்ட் நானும் யாஷிகாவும் நடிக்கும் சில நொடிகளில் என்ற திரைப்படத்திற்கான புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்ராஜ் இயக்குகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஜீன்ஸ், தாம் தூம், கோச்சடையான் போன்ற படங்களை தயாரித்த முரளி மனோகரன் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே போவோம். அப்படி போகும்போது செல்பி எடுத்துக் கொள்வது போன்ற காட்சிகளை படமாக்கினார்கள். அந்த போட்டோக்களை தான் நான் பட ப்ரோமோஷனுக்காக என்னுடைய பேஸ்புக்கிலும், இன்ஸ்டாவிலும் பகிர்ந்து கொண்டேன்.
மத்தபடி எல்லோரும் நினைக்கிற மாதிரி எனக்கும் யாஷிகாவுக்கும் காதலும் கிடையாது, கல்யாணமும் கிடையாது. எங்களுடைய போட்டோக்களை பார்த்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கிறாங்க. வெளியூரில் இருந்ததால் உடனடியாக இது பற்றி பேச முடியவில்லை என்று விளக்கம் கொடுத்து புது போட்டோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications