ரிதன்யா ஆன்மா தெருமுனையில் நிக்குது.. மாமனார் தந்த இம்சை.. பெண் சாமிருக்கு எப்படி தெரியும்: பிரபலம்
சென்னை: ரிதன்யா வழக்கில், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையில் உள்ள சட்டப் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, குடும்பத்தினர் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரிதன்யாவின் பெயரை கெடுக்கும் வகையில், சில யூடியூபர்கள் தவறான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களில் சில யூடியூபர்கள் இறங்கியுள்ளனர்..

இவர்கள் பதிவிடும் தவறான வீடியோக்களையும் மில்லியன் கணக்கில் பார்வையிடுவது அதிர்ச்சியை தருகிறது.
ஒரே மகளான ரிதன்யாவை திருமணம் செய்து கொடுத்தும், மாப்பிள்ளை தரப்பில்
வரதட்சணை கேட்டிருக்கிறார்கள்.. பிசினஸ் செய்வதற்காக ரூ.100 கோடி கேட்டிருக்கிறார்கள்.. இந்த தொல்லையால் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார்.. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
ரிதன்யா விவகாரம் தொடர்பாக 3 பேருமே கைதாகி உள்ளனர்.. ஆனால் நிகிதாவை
மட்டும்தான் பிடிக்க முடியல.. நிகிதா மட்டும்தான் செல்வாக்கான நபர்.. நிகிதாவை கைது செய்வார்களா? என்றும் தெரியாது..
மோசமான வீடியோக்கள்
ஆனால், இதில் ரிதன்யா பற்றின உறுதிப்படுத்தாத தகவலை வைத்து யூடியூப்களில் வீடியோக்களை பதிவிடுவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இறந்துவிட்டாலோ, அல்லது கொலை செய்யப்பட்டாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ, அது விவகாரமாக மாறும்போது, உடனே தவறான வீடியோக்களை பதிவிட துவங்கிவிடுகிறார்கள்..
அந்த மரணத்தை செய்தியாக தருவதற்கு பதில், பிணத்தை வைத்து சம்பாதிக்க துவங்கிவிடுகிறார்கள். அந்த ஆவி, பெண்ணின் புருஷனை பழி வாங்க போகிறது? என்று வீடியோ போட்டால், அதனையும் 15 லட்சம் பேர் பார்க்கிறார்கள்.
பிரபலமான டாக்டர்
அதேபோல, முன்னாள் முதலமைச்சரின் பெயர் கொண்ட, ஒரு பிரபலமான டாக்டர், ரிதன்யா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதை பேசுவதாக கூறி, உடலுறவு எப்படி வைத்து கொள்ளலாம் என்றெல்லாம் யூடியூப்களில் பேசி வருகிறார்.. இது கண்டிக்கத்தக்கது..
ரிதன்யா போதுமான தைரியம் இல்லாத காரணத்தினால், வரதட்சணை கொடுமையை சமாளிக்க முடியாமல், இந்த சமூகத்தை எதிர்க்க முடியாமல், குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் உயிரை மாய்த்து கொண்டார். இதை எப்படி செக்ஸுடன் பொருத்தி பார்த்து பேச முடிகிறது? படுக்கையறையில் எப்படி மாமியார் கேமரா வைக்க முடியும்? எங்காவது இப்படி நடக்குமா?
கண்டிக்க யாருமில்லையா
பணத்தாசை பிடித்த மாமனார், மாமியார் சைக்கோக்கள் இருக்கலாம்.. ஆனால், கேமராவையே மாமியார் வைத்தார், மாமனார் வக்கிரமான டார்ச்சர் தந்தார் என்றெல்லாம் மோசமாக பேசுகிறார்கள்..
இதுபோன்ற யூடியூப்களை கண்டிக்க யாருமில்லை என்பதற்காகவும், ரிதன்யா மாமியார், மாமனார், கணவர் 3 பேருமே ஜெயிலுக்கு போய்விட்டதால், இதை கேட்கமுடியாது என்பதற்காகவும், எதை வேண்டுமானாலும் வீடியோ போடுகிறார்கள்.. இதனால் யூடியூப்களுக்கே பிரச்சனை வரப்போகிறது.
தெருமுனையில் ஆவி
"ஆன்மா வருகிறது" என்று சொல்வதற்காகவே, பெண் சாமியார்கள் இருக்கிறார்கள்.. இறந்த பெண்ணுக்கும், அந்த பெண் சாமியாருக்கும் என்ன சம்பந்தம்?
"தெருமுனையில் நிற்கிறது ஆவி, பழி வாங்க காத்திருக்கிறது, பெண்ணின் ஆவி சாப்பிடவே இல்லை, இறந்துபோன பெண் என்னுடைய கனவில் வந்தாள்" என்றெல்லாம் வீடியோ வெளியாகிறது.
ஆவி எப்படி சாப்பிடும்? இந்த வீடியோவையும் 15 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.. இதற்கு 1 லட்சம் ரூபாய் வருமானமும் வந்திருக்கும்? பாவம் அந்த இறந்துபோன பெண் " என்று வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications