"நம்ம வீட்டிலும் வந்தாச்சு” புகைப்படத்தை வெளியிட்டு ரித்திகா சொன்ன செய்தி.. குவியும் கருத்துக்கள்
நடிகை ரித்திகா தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் நடிகை ரித்திகா சமீபத்தில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
என்னுடைய வீட்டில் காய்த்த மாங்காய் புகைப்படத்தையும் ரித்திகா பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ரித்திகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வீட்டில் எதுவும் விசேஷமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மாங்காய் புகைப்படம்
நடிகை ரித்திகா தன்னுடைய கணவரோடு பொள்ளாச்சியில் விடுமுறையை கழித்து வருகிறார். அங்கே எடுத்த க்யூட்டான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அவர் தன்னுடைய வீட்டில் மா மரத்தின் இருந்த மாங்காயை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பப்பட்டு வருகிறது. ரித்திகாவுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையில் ரித்திகா கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான் இப்படி ஒரு புகைப்படமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜா ராணி சீரியல் வினோதினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக ரித்திகா தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் அந்த சீரியலில் மூணாவது வினோதினியாக கதாநாயகனின் தங்கை கேரக்டரில் இவர் நடித்திருப்பார். ஏற்கனவே இரண்டு கதாநாயகிகள் அந்த சீரியலில் மாற்றப்பட்ட நேரத்தில் மூன்றாவதாக இவருடைய அறிமுகம் கிடைத்தது. ரித்திகாவின் நிஜமான பெயர் தமிழ் செல்வி தானாம். இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். ஸ்கூல், காலேஜ் எல்லாமே ரித்திகா கோயம்புத்தூரில் தான் படித்திருக்கிறார். இவர் பி ஏ தமிழ் படித்திருக்கிறாராம் இவருக்கு எம்எஸ்சி சாஃப்ட்வேர் சிஸ்டம், எம்பில், பிஹெச்டி எல்லாமே படிக்க வேண்டும் என்று தான் ஆசையாக இருந்ததாம். படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று ஆசையாக இருந்த இவர் நடிப்பிற்கு வந்திருக்கிறார்.

குடும்ப கஷ்டம்
படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும் ரித்திகா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டில் பணக்கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் இவர் பார்ட் டைம் வேலை பார்க்க தொடங்கியிருந்தாராம். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் இவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதன் மூலமாக பல லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறாராம்.

ராஜா ராணி சீரியலில் வாய்ப்பு
அப்போதே ரசிகர்களோடு இவர் பழகி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் விஜே வாக வேண்டுமென்று வாய்ப்பு தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைக்க இவர் அங்கே சென்று விட்டாராம். இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வரும்போது இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம்.












Click it and Unblock the Notifications