கோமாளி படத்தில் நடித்த ஜெயம் ரவி தங்கச்சிக்கு இது மறுபிறவியாங்க....!
சென்னை: ஆமாங்க கோமாளி படத்தில் ஜெயம் ரவி தங்கச்சியா நடிச்ச ஆனந்திக்கு இது மறுபிறவிதாங்க. RJ ,VJ வாக தன் பயணத்தைத் தொடங்கியவர் ஆனந்தி. அதுமட்டுமில்லாம யூட்யூப் சேனல்களில் பிரபலமானவர். அதனால் கிடைத்த பிரபலத்தால் கோமாளி படத்திலும் நடித்தார்.
இது என்னப்பா ஒரு சாதனையாகும் நினைச்சிடாதீங்க .ஏன்னா இவங்க சாவின் விளிம்பிற்கு போயிட்டு வந்து இருக்காங்க. மருத்துவர்களே முடியாதுன்னு, சொன்ன பிறகு தாங்க கண்ண முழிச்சி இருக்காங்க.
விபத்தில் அவங்க முகத்தை பார்த்து முதல்ல அதிர்ச்சி அடைந்ததும் துவண்டு போகாமல் வாழ்க்கையில முழுமையாக வாழனும் அதில் இன்பம் துன்பம் வெற்றி தோல்வி எது வந்தாலும் அதனை கடந்து சென்று பிறருக்கும் உத்வேகம் ஊட்டும் வகையில் நம் வாழ்க்கை வாழ்ந்து காட்டுரவங்க நம்ம ஆனந்தி.

கட் பண்ணா கோவை!
கோவையில் பிறந்து வளர்ந்த RJ ஆனந்தி காலேஜ் படிக்கும்போது செம்மையா துருதுருன்னு ஜாலியான பொண்ணா இருந்திருக்காங்க. அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் அவங்க ஃப்ரெண்ட் கூட RJ இன்டர்வியூக்கு போய் இருக்காங்க. அங்க தான் அவங்களுக்கு ட்விஸ்ட் இருந்திருக்கு. ஆமாங்க பிரண்டு கூட கம்பெனிக்கு போன இவங்க செலக்ட் ஆயிட்டாங்க இவங்க ஃபிரண்டுக்கு வாய்ப்பு கிடைக்கல.

என்ஜாய்
கிடைச்ச வேலையில் நம்ம திறமையை நிரூபிக்கனும், நல்லா என்ஜாய் பண்ணி ஒர்க் பண்ணிட்டு இருக்கும்போதுதான் அந்த மோசமான சம்பவம் நடந்திருக்கு. அவங்க ஒரு ஸ்கூல்ல ஈவெண்ட் கவர் பண்ணிட்டு வரும்போது தான் அவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்து இருக்கு. அந்த விபத்துல இவங்க பிழைக்கவே மாட்டாங்க என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ரொம்ப அடி
மருத்துவர்கள் கூட கஷ்டம் முடியாதுன்னு சொன்ன டைம்ல தான் இவங்களுக்கு நினைவு திரும்பி இருக்கு. அந்த விபத்துல இவங்க முகத்தில்தான் ரொம்ப அடியாம் நாலு பல்லு வேற உடைஞ்சு போச்சு. இவங்க கண்முழிச்ச நேரம் இவங்களுக்கு மைண்ட்ல அந்த ஸ்கூல் ஈவெண்ட் முடிச்சு கொடுக்கணுமே அதற்காக அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பார்கள் என்று தான் தோணுச்சாம். அந்த விபத்து தாங்க அவரை முற்றிலுமாக மாற்றியது.
Recommended Video

வந்தது தன்னம்பிக்கை
மருத்துவமனையிலிருந்த நாள்கள் பலவற்றை கற்றுக் கொடுத்து இருக்கு. அதுக்குப் பிறகுதான் அவர் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்கிறாராம். திடீரென ஒரு நாள் ஒரு கால் வந்து இருக்கு. நீங்க எங்க அடுத்த படத்தில் ஜெயம் ரவி தங்கச்சியா யோகிபாபுக்கு ஜோடியாக நடிக்கிறீங்களா ன்னு கேட்டு இருக்காங்க. அந்த அழைப்பை அவர் நம்பவில்லையாங்க ஏதோ பிராங்க் கால் என்றுதான் நினைச்சாங்களாம்.

கோமாளி படத்தில் வாய்ப்பு
இரண்டு நாள் கழிச்சு தான் அது உண்மையானது என்று தெரிஞ்சு கோமாளி படத்தில் ஜெயம் ரவியை திட்டுற மாதிரி வர்ற சீனுக்கு அவரை திட்ட பஸ்ட் கொஞ்சம் கஷ்டப்பட்டாரம். அப்புறம் ஜெயம் ரவி முகத்துல ரியாக்சனை மாற்றி நடிக்கும்போது ஈசியா இவங்களும் நடிச்சுட்டாங்களாம். 2017ல வேலையில்லா பட்டதாரி படத்தில் ரிப்போர்ட்டர் ஆகவும் 2019 இல் கோமாளி அப்புறமா பிகில், தாராள பிரபு அப்படி திரைப்படங்களிலும் நடிச்சுட்டு வராங்க.
இவரோட யூடியூப் சேனல் பார்க்கும்போது அவங்களோட தன்னம்பிக்கை தெரியுது. இனி வரும் காலங்களிலும் இன்னும் சிறப்பாகவும் வெற்றி அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள்ன்னு அவங்க ரசிகர்கள் வாழ்த்திட்டிருக்காங்க.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications